Friday, May 17, 2024
-- Advertisement--

அதிமுக ஆட்சியில் மின் பிரச்சனைக்கு அணில் தான் காரணம் என்று விளக்கம் கொடுத்தது ஏன்..!!! தெர்மோகல் விஞ்ஞானி செல்லூர்ராஜு அவர்களை மின் கம்பிகளை பிடித்து ஆய்வு செய்ய அழைக்கிறோம் – மின்துறை அமைச்சர் பதிலடி.

அதிமுக முன்னாள் எம்எல்ஏ செல்லூர் ராஜு அவர்கள் இன்று நடந்த ஆலோசனைக் கூட்டம் ஒன்றில் திமுக அமைச்சர் செந்தில்பாலாஜி பற்றி பேசிய பேச்சு பெரும் பரபரப்பாகியுள்ளது.

அந்தக் கூட்டத்தில் செல்லூர் ராஜு அவர்கள் நான் தப்பித்து விட்டேன் நம்ம முதலமைச்சரும் சரி அவங்க அமைச்சர்களும் சரி நவீன விஞ்ஞானி என்றெல்லாம் என்னை அழைத்தார்கள்.

இப்போது புதிய கண்டுபிடிப்பாக மாண்புமிகு மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் மிக அருமையான ஒன்றை கண்டுபிடித்துள்ளார். நல்ல வேளை நான் பிழைத்துக் கொண்டேன் என்ற பாடல் போல தற்போது என்னை விட்டுட்டு அணில்லை கண்டுபிடித்துள்ளார்.

செந்தில் பாலாஜி அவர்கள் தான் உண்மையான விஞ்ஞானி என்று கிண்டலடித்தார். அதுமட்டுமல்லாமல் எங்கள் ஆட்சியில் 10 ஆண்டுகாலமாக அணில்கள் எல்லாம் வெளிநாட்டிற்கு போய் இருந்தது தற்பொழுது உங்கள் ஆட்சி வந்தவுடன் எல்லாம் படையெடுத்து தமிழகத்திற்கு வந்திருச்சி அது மின்கம்பியில் போய்க்கொண்டே இருக்கிறது இது ஒரு புதிய கண்டுபிடிப்பு இதற்கு உண்மையிலே ஆஸ்கார் விருது கொடுக்கணும் அதுமட்டுமல்லாமல் அவருக்கு நோபல் பரிசு கொடுக்க வேண்டும் என்று கிண்டலாக பேசினார்.

அதற்கு பதில் கொடுத்த அமைச்சர் செந்தில்பாலாஜி ஆலங்குளம் துணை மின் நிலைய மின் பிரச்சினைகளுக்கு அணில்கள் காரணமென 2020இல் மதுரை உச்சநீதிமன்றத்தில் அப்போதைய அதிமுக அரசு அளித்த விளக்கம் இது பார்க்க படித்தவர் போல் இருக்கும் செல்லூர் ராஜு இதைப்பற்றி தங்கமணிடமோ உயர் நீதிமன்றத்திடமோ கேட்டு புத்தி தெளிய வேண்டுகிறேன் என்று பதிலடி கொடுத்தார்.

அதனைத் தொடர்ந்து நாகையில் அணில் ஓடியதால் மின்கம்பிகள் உரசி விபத்து ஏற்பட்டு மின்கம்பியை சீரமைக்கும் பணியில் TNEB ஊழியர்கள் என்று தந்தி டிவியில் ஒளிபரப்பான செய்தி ஒன்றை பதிவிட்டு மதுரை தெர்மாகோல் சயிண்டிஸ்ட் செல்லூர் ராஜு இந்த செய்தியை பார்த்த பின் நேரில் வந்து மின் கம்பிகளை பிடித்து ஆய்வு செய்ய அழைக்கின்றோம் என்று கூறியுள்ளார் செந்தில்பாலாஜி.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles