கொரானோ பிரச்சனையால் வாழ்வாதாரத்தை இழந்து வரும் கோவை தொண்டாமுத்தூர் பகுதி மக்களுக்கு ஈஷா கிராம புத்துணர்வு இயக்கம் சார்பில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
சுமார் 2 லட்சம் மக்கள் தொகை கொண்ட இந்த பகுதியில் கிட்டத்தட்ட அனைத்து கிராமங்களிலும் வீட்டிற்கு சென்று உணவு, நிலவேம்பு போன்றவைகள் தரப்படுகின்றன. மேலும் இந்த நிவாரண பணிக்காக சத்குரு வரைந்த ஓவியம் ஏலத்தில் விடப்பட்டது.
முழுமையாக வாழ என்ற தலைப்பில் 5 க்கு 5 அடி அளவில் ஒரு வடிவமற்ற ஓவியத்தை வரைந்தார். அந்த ஓவியம் ஒருவர் ரூ.4 கோடியே 14 லட்சத்திற்கு வாங்க சம்மதித்துள்ளார்.
இது தொடர்பாக சத்குரு கூறுகையில் இந்த பணம் கொரானோ நிவாரணத்திற்காக வழங்கப்பட்ட நிதி. எனது ஓவியத்திற்கான விலை அல்ல என்றும் அவர் கூறியுள்ளார்.