Friday, May 3, 2024
-- Advertisement--

ஆட்சிக்கு வந்த 24 மணி நேரத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய நடவடிக்கை எடுப்போம் என்றார்கள். ரத்து செய்தார்களா கேள்வி எழுப்பிய எடப்பாடி பழனிச்சாமி.

தமிழ்நாட்டில் நீட் தேர்வு நடத்த விட மாட்டோம் என்று கூறிய விடியல் அரசு இப்போது மாணவ செல்வங்களை ஏமாற்றுவதை நிறுத்துமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார் எதிர்க்கட்சித் தலைவர் தமிழ்நாடு முன்னாள் முதல்வர் திரு எடப்பாடி பழனிச்சாமி.

திமுக தன்னுடைய தேர்தல் பிரச்சாரத்தின் போது மாநிலம் முழுவதும் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் முதல் கையெழுத்து நீட் தேர்வு ரத்து என்பது தான் என்று கூறியது நீட் தேர்வை ரத்து செய்யும் வழிமுறைகள் அப்போதைய எதிர்க்கட்சி தலைவரும் இப்போதைய முதலமைச்சருமான திரு மு க ஸ்டாலின் அவர்களுக்கு நன்றாகவே தெரியும் என்று அவர்களது இளைஞரணி தலைவர் முதல் கடைக்கோடி பேச்சாளர்கள் வரை தேர்தல் மேடைகளில் அம்மா அரசிற்கு எதிராக வெற்று முழக்கமிட்டு மக்களை திசை திருப்பி வெற்றியும் பெற்றனர்.

நான் கடந்த மாதம் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் ஆளுநர் உரையின் பேசும் போது கூட நீட் தேர்வில் தமிழக மாணவர்கள் தயாராக வேண்டுமா வேண்டாமா என்பதை நேரடியாக பதில் சொல்லுங்கள் என்று கேட்டேன் ஆனால் அதற்கு சட்டமன்றத்தில் முதலமைச்சர் நேரடியாக எந்த பதிலும் தரவில்லை நீதியரசர் திரு கே ராஜன் அவர்கள் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் அதன் பரிந்துரையின் பேரில் மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பதிலளித்தனர்.

திமுக- காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் மத்திய அரசிதழ் நாள் 21.12.2010 -ல் நீட் தேர்வு குறித்து அறிவித்தது.மாண்புமிகு அம்மா அவர்கள் சட்டப்போராட்டம் நடத்தி உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மறு சீராய்வு மனு தாக்கல் செய்து, அம்மா பெற்ற ஆணையை ரத்து செய்ததும் இன்றைய முதல்வரின் கூட்டாளிகள் தான் என்பதை தமிழக மக்கள் மறக்கவில்லை.

தேர்தலின் போது, ஆட்சிக்கு வந்த 24 மணிநேரத்தில், நீட் தேர்வை ரத்து செய்ய நடவடிக்கை எடுப்போம் என்றும், அதற்கானவழிகள் எங்களுக்கு தெரியுமென வாய் வீரம் காட்டிய திரு.ஸ்டாலின் அவர்கள் தன் இயலாமையை மறைக்க என் மீது பழி சுமத்தியுள்ளார்.திமுக ஆட்சியாளர்கள் நீட் சம்பந்தமாக,தேர்தலின்போது அளித்த வாக்குறுதியை காப்பாற்றும் வகையில் நடவடிக்கையினை உடனடியாக எடுக்க வேண்டுமென மீண்டும் வலியுறுத்துகிறேன் என்று கூறியுள்ளார் எடப்பாடி பழனிச்சாமி.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles