கொரோனா பாதிப்பினால் நாடெங்கும் சில தளர்வுகள் உடன் ஊரடங்கு கடைபிடித்து வருகின்றனர். நாடெங்கும் கொரோனா தொற்று அதிகரித்துவரும் நிலை ஒரு பக்கம் இருக்க, மின்சார கட்டணம் அதிகரித்து வருவது மற்றொரு பக்கம். இதனால் மக்கள் மனம் நொந்து போகிறார்கள்.
இந்த ஊரடங்கு காலத்தில் கொரோனா தான் அதிகரித்து வருகிறது என்று பார்த்தால் மின் கட்டணமும் அதிகமாக வருகிறது என்று குழம்பி வந்த நிலையில் இருக்கிறார்கள் மக்கள். தெலுங்கானா மாநிலம் மேடக் மாவட்டத்தைச் சேர்ந்த மின்வாரியத் துறை அதிகாரிகள் இருவர் தங்கள் பணி எல்லைக்கு உட்பட்ட அலதுர்கம் என்ற கிராமத்தில் கணக்கிடப்பட்ட மின் கட்டணத்தை வசூலிக்க நேற்று சென்றனர்.
அப்போது அந்த கிராமத்தில் உள்ள மக்களிடம் உடனே மின் கட்டணம் செலுத்துமாறு மின்வாரியத் துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். அதற்கு மக்கள் எப்படி இவ்வளவு மின் கட்டணம் வரும் என்று மின்வாரியத் துறை அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி ஆத்திரமடைந்த மக்கள் மின் கட்டணம் வசூலிக்க வந்த மின்வாரிய துறை அதிகாரிகள் இருவரை அருகிலிருந்த கம்பத்தில் கட்டி வைத்தனர்.
இதைப் பற்றி தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மின்கம்பத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்த அதிகாரிகளை மீட்டனர் மேலும் இது தொடர்பாக கிராம மக்கள் 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்து விசாரித்து வருகின்றனர் போலீசார்.