கொரோனா தாக்கத்தினால் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளன. இந்த ஊரடங்கு உத்தரவால் சொந்த ஊருக்கு செல்லமுடியாமல் மக்கள் பெரிதும் தவிர்த்து வந்துள்ளனர். அதில் முக்கியமாக பேருந்து வசதி மற்றும் அனைத்து வகையான சேவைகள், இன்றி மக்கள் பெரிதும் தவிர்த்து வந்துள்ளனர். இந்த நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்குள்ளாக பயணிக்க இ-பாஸ் நடைமுறையை அமுலுக்குக் கொண்டு வந்துள்ளார்.
இ-பாஸ் கிடைக்காததாலும், இ-பாஸ் பெற்று தர இடைத்தரகர்கள் உள்ளிட்டோர் அதிகரித்துள்ளதாலும் இ-பாஸ் நடைமுறைகளை நீக்கவோ அல்லது எளிமைப்படுத்தவோ வேண்டும் என மக்கள் தொடர் கோரிக்கைகளை வைத்து வந்தனர்.
இந்த நிலையில் நடைமுறையில் புதிய தளர்வுகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இதில் வருகின்ற ஆகஸ்ட் 17ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ-பாஸ் அனுமதி வழங்கப்படும் என்றும், அந்த விண்ணப்பத்தின் போது ஆதார் கார்டு எண், ரேஷன் கார்டு எண் மற்றும் செல்போன் எண் ஆகியவற்றை இணைத்தால் உடனடியாக இ-பாஸ் பெற்றுக்கொள்ளலாம் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தெரிவித்துள்ளனர்.
அதே சமயத்தில் தொழில் ரீதியான மற்றும் தவிர்க்க இயலாத பயணங்களுக்கு மட்டுமே மக்கள் அந்த சேவையை பயன்படுத்துமாறும் தேவையற்ற பயணங்களை தவிர்க்க வேண்டும் என்றும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.