சமந்தா இளைஞர்களின் கனவுக்கன்னி. தமிழ் மற்றும் தெலுங்கு ரசிகர்கள் கொண்டாடப்பட்ட நடிகை சில மாதங்களாக மீள முடியாத நோயினால் அவதிப்பட்டு வருகிறார். மயோசிட்டிஸ் எனும் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.
இருந்தும் அவர் நடிப்பை நிறுத்த வில்லை, புஷ்பாவின் ஓ சொல்றியா மாமா பாட்டில் கவர்ச்சியாக நடனம் ஆடி இந்தியா முழுவதும் பெரிய அளவில் பிரபலம் அடைந்தார்.
பின்னர் விஜய் தேவரகொண்டா உடன் சேர்ந்து படம் நடித்து வருகிறார் , அப்படத்தின் பெயர் KUSHI இது ஒரு தெலுங்கு படம்.
என் ரோஜா நீ தான் என்ற பாடல் வெளியாகி தெலுங்கு ரசிகர்கள் மட்டும் அல்லாமல் தமிழ் ரசிகர்களை பெரிய அளவில் கவர்ந்தது. குறிப்பாக அந்த பாடலின் தமிழ் வரிகளில் இயக்குனர் மணிரத்தினம் அவர்கள் இயக்கிய அலைபாயுதே, நாயகன், ரோஜா, காற்று வெளியிடை, மௌனராகம், ஓ காதல் ஓ கண்மணி போன்ற படங்களின் பெயரை வரிகளாக கச்சிதமாக அமைத்து தமிழிலும் அந்த பாடலை பெரிய ஹிட் பாடலாக ஆக்கினார்கள் படக்குழுவினர்.
தற்பொழுது குஷி படத்தின் முதல் பாடல் மக்களிடம் பெரிய வரவேற்பை பெற்று வரும் இந்நிலையில் அந்த படத்தின் இரண்டாவது பாடலின் ப்ரோமோ நேற்று வெளியானது.
இந்நிலையில் சமந்தாவின் சமீபத்திய புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. அதில் சமந்தாவின் முகம் வாடிப்போய் இருந்தது , பாக்கவே பரிதாபமாக இருந்தார்.
தற்பொழுது படப்பிடிப்பை முடித்துவிட்டு சற்று ஓய்வுக்காகவும் மற்றும் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல இருக்கிறார் சமந்தா. ஒரு நேரத்தில் தமிழ் தெலுங்கு சினிமா ரசிகர்கள் தூக்கி கொண்டாடிய நடிகைக்கு இப்படி ஒரு நிலைமையை என்று ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர்.
சமந்தாவிற்கு வந்து உள்ள நோய்யை கட்டுப்படுத்துவதற்கு தான் மருந்து இருப்பதாகவும் முழுமையாக குணம்படுத்த சரியான மருந்துகள் இல்லை என்ற தகவலும் வெளிவந்து கொண்டு இருக்கிறது.
சிகிச்சை பெற அமெரிக்கா போகும் சமந்தா விரைவில் நோயிலிருந்து குணமாகி வர வேண்டும் என அவரது ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.