Friday, May 17, 2024
-- Advertisement--

உள்ளம் உருகுதையா பிரியங்கா மோகன் புகைப்படத்தை பார்த்து உருகி வரும் ரசிகர்கள்.

பிரியங்கா மோகன் நானி அவர்களின் கேங் லீடர் என்ற படத்தில் அறிமுகமானார். சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்திற்கு அந்த நேரத்தில் ஹீரோயின் தேடும் படலமும் தீவிரமாக நடந்து வந்தது அப்போது சிவகார்த்திகேயன் பிரியங்கா மோகன் அவர்களின் புகைப்படத்தை இயக்குனருக்கு அனுப்பி இந்த ஹீரோயின் எப்படி இருக்காங்க என்று கேட்க நல்லா இருக்காங்க இப்போ ஏதோ தெலுங்கு படம் நடிச்சிட்டு இருக்காங்கனு கேள்விப்பட்டேன் அவங்கள எப்படி அணுகலாம் அப்படின்னு யோசிச்சு கிட்டு இருந்தாங்க அந்த நேரத்துல சரண்யா பொன்வண்ணன் அவர்கள் கேங் லீடர் படத்தில் பிரியங்காவுடன் நடித்திருந்ததால் சரண்யா பொன்வண்ணன் அவர்களை வைத்து அணிகிறார்கள்.

எப்படியோ ஒருவழியாக பிரியங்கா மோகனை தமிழில் டாக்டர் படத்தில் அறிமுகம் செய்தார்கள் பத்மினி என்ற கதாபாத்திரத்தில் திமிர் கொஞ்சமும் நிறைய அப்பாவித்தனம் நிறைந்த பெண்ணாக டாக்டர் படத்தில் நடித்திருந்தார். முதல் படத்திலேயே இயல்பான நடிப்பை வெளிப்படுத்திய அவருக்கு முதல் படம் பெரிய வரவேற்பு கொடுத்தது. குறிப்பாக செல்லம்மா பாடல் பிரியங்கா மோகன் அவர்களுக்கு பெரிய பிரபலத்தை தேடிக் கொடுத்தது.

டாக்டர் படம் வெற்றி பெற்றது அதற்கு அடுத்து பிரியங்காவின் தமிழ் படம் என்னவாக இருக்கும் என்று அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நேரத்தில் சிவகார்த்திகேயனின் அடுத்த படமான டான் படத்திலும் ஹீரோயினாக நடிக்கிறார் அதுமட்டுமல்லாமல் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பாண்டியராஜ் அவர்கள் இயக்கத்தில் எதற்கும் துணிந்தவன் படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக ஆதினி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் பிரியங்கா மோகன்.

சமீபத்தில் எதற்கும் துணிந்தவன் படத்தில் இருந்து சில பாடல்கள் வெளியானது அதில் உள்ளம் உருகுதையா என்ற பாடலில் சூர்யாவும் பிரியங்கா மோகனும் வித்தியாசமான கெட்டப்பில் அசத்தி இருந்தனர்.

அதன்பின் சமீபத்தில் வெளியான எதற்கும் துணிந்தவன் 3 வது பாடலான சிவகார்த்திகேயன் எழுதிய சும்மா சுறுன்னு என்ற பாடலில் சூர்யா பார்க்க செம ஸ்டைலாக இருந்தார் பிரியங்கா மோகனும் கொள்ளை கொள்ளும் அழகில் இருந்தார்.

சூர்யா பிரியங்கா ஜோடியை பார்க்கையில் இந்த பாடல் அடுத்த செல்லம்மாவாக இருக்கலாம் என்று கூறி வருகின்றனர். செல்லமா பாடலுக்கு பணியாற்றிய நடன இயக்குனர் தான் இந்த பாடலிலும் பணியாற்றி உள்ளார்.

இதோ அந்த புகைப்படங்கள்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles