கொரானோ என்னும் நோய் தோற்று தற்போது மனித குலத்தையே அழித்து விடுமோ என்ற பயம் உலகெங்கும் உள்ள மக்கள் மனதில் தற்போது இருக்கும் அச்சம் ஆகும். இந்நோய்க்கான தடுப்பு மருந்து கண்டுபிடிக்காமல் இருப்பதே இந்த அச்சத்திற்கான காரணம்.
கொரானாவை கட்டுப்படுத்த மனித குலத்தால் எல்லா காலத்திலும் போற்றக்கூடிய பணியை மருத்துவர்களும், செவிலியர்களும் செய்துவருகின்றனர். அப்படியான ஒரு செவிலியரை இழந்து விட்டது கேரளா.
கேரளாவில் உள்ள குன்னங்குளம் என்ற ஊரில் உள்ள அரசு மருத்துவமனையில் மார்ச் மாத மருத்துவ பயிற்சியில் ஆண் செவிலியராக பணியில் இருந்தவர் ஆசிஃப். இவர் பாத்து நாட்கள் பயிற்சி முடித்தவுடன் தன் தாயை பார்க்க ஆசையாக வீட்டிற்கு செல்லும் வழியில் இவர் வாகனம் மோதி இறந்துள்ளார்.
இந்த செய்தி கேரளா மக்களை சற்று சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.