Friday, May 17, 2024
-- Advertisement--

சுந்தரா ட்ராவல்ஸ் நடிகை தற்போது எதில் நடிக்க உள்ளார் தெரியுமா ..?

தமிழ் சினிமாவில் பல காமெடி படங்கள் வந்துள்ளன தற்போது வரை அந்த காமெடி படங்களை நினைத்தாலே நமக்கு சிரிப்பு வரும் .

அந்த வகையில் பல படங்கள் மக்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்துள்ளன அப்படி ஒரு சிறந்த காமெடி படம் தான் சுந்தரா ட்ராவல்ஸ்.

நகைச்சுவை புயல் வடிவேலு மற்றும் மறைந்த நடிகர் முரளி நடித்த படம் தான் சுந்தரா டிராவல்ஸ். ஒரு பேருந்தை மையமாக வைத்து முழு கதையும் இருக்கும்.

இந்த படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தவர் ராதா. ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் இவருக்கு இந்த படமே பெருமளவில் பெயர் பெற்று தந்தது.

இது தொடர்ந்து ராதா தமிழில் எந்த படங்களிலும் நடிக்கவில்லை . குடும்பம் குழந்தை என செட்டில் ஆகிவிட்ட ராதா தற்பொழுது மீண்டும் தமிழில் ரி என்ட்ரி கொடுக்க உள்ளார். ஆனால் சினிமாவில் இல்லை சீரியலில்.

விஜய் தொலைக்காட்சியில் பிரபலமான சீரியல் பாரதிகண்ணம்மா.
பாரதி கண்ணம்மா சீசன் 1 தற்போது முடிவுற்ற நிலையில் தற்போது சீசன் 2 தொடங்கியுள்ளது. இதில் வில்லியாக களம் இறங்க உள்ளார் ராதா. இது குறித்த பதிவு ஒன்று இணையத்தில் வெளிவந்துள்ளது. இவர் சுந்தரா டிராவல்ஸ் ஹீரோயின் ஆச்சே என ரசிகர்கள் ஷாக் ஆகி உள்ளனர்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles