Monday, May 13, 2024
-- Advertisement--

உறுதியானது தலைவரின் 170 ..!! ரஜினியின் கதாபாத்திரம் என்னனு தெரியுமா.. கண்டிப்பாக ஒரு புரட்சி வெடிக்கும் ..!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அண்ணாத்த படத்தை தொடர்ந்து அவரது மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கி வரும் லால் சலாம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.

லைக்கா தயாரிப்பில் தலைவரின் 170வது படம் உருவாக உள்ளது. இதில் தலைவரின் கதாபாத்திரமும் மிக பிரபலமாக இருக்கும் என்றும் குறிப்பிடப்படுகின்றது. ஏற்கனவே தலைவரின் 170 ஆவது படத்தை சிவகார்த்திகேயன் நடித்த டான் பட இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கப் போவதாக கூறப்பட்டது. மேலும் பிரதீப் ரங்கநாதனும் 170 வது தலைவர் படத்தை இயக்கலாம் என்ற பேச்சும் அடிபட்டது.

தற்போது இவர்களின் இருவரும் இல்லை, ஜெய் பீம் என்ற படத்தை இயக்கிய ஞானவேல் தான் தலைவரின் 170 ஆவது படத்தை இயக்கப் போவதாக லைக்கா நிறுவனம் அதிகாரப்பூர்வ தகவலை அறிவித்துள்ளது.

சூர்யா, நிஜமோல் ஜோஸ், மணிகண்டன், ரதிஷா விஜயன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ஜெய்பீம். இந்த படம் சர்வதேச அளவில் பல விருதுகளை வாங்கியது. அரசியல் ரீதியாகவும் பெரும் சர்ச்சைகளையும் வழக்குகளையும் இந்த படம் சமாளித்தது.

இது போலவே தற்பொழுது தலைவர் ரஜினிகாந்த் நடிக்கும் படமும் சர்ச்சைக்குரிய கதையாக இருக்குமா என்ற கேள்வி தற்போது ரசிகர்களிடையே எழுந்துள்ளது. ஜெய் பீம் போலவே இந்த படமும் பெரும் புரட்சியை உருவாக்கும் எனவும் ரசிகர்கள் கருத்து கூறி வருகின்றனர்.

மேலும் இந்த படத்தில் ஓய்வு பெற்ற காவல் அதிகாரியாக ரஜினி நடிக்கிறார். தூக்கு தண்டனையை எதிர்த்து போராடுபவராக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles