90களில் வெளிவந்த பல திரைப்படங்கள் இன்னும் மக்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்து வருகின்றன. அந்த வகையில் ஹிட்டான ஒரு படம் தான் தளபதி விஜய் நடித்த பூவே உனக்காக படம் .இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்தவர் அஞ்சு அரவிந்த்.

அஞ்சு அரவிந்த் தமிழ் சினிமாவில் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே படங்கள் நடித்துள்ளார். குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் பூவே உனக்காக, ஒன்ஸ் மோர், வானத்தைப்போல என்ற சில படங்களில் நடித்தார். நடித்த படங்கள் பெரிய அளவில் வெற்றி பெற்றன .

மலையாளம் மொழியில் அதிகமான படங்களை நடித்துள்ள அஞ்சு அரவிந்த் 2002ஆம் ஆண்டு அரவிந்த் என்பதைத் திருமணம் செய்து கொண்டு 2004 ஆம் ஆண்டு விவாகரத்து செய்தார்.

அதன் பிறகு வினயன் என்பவரை திருமணம் செய்து தற்பொழுது குடும்பம் குழந்தை என செட்டில் ஆகிவிட்டார். இவருக்கு அன்விதா வினயன் என்ற மகள் உள்ளார். சமீபத்தில் இவர் எடுத்த குடும்ப புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
