Friday, May 17, 2024
-- Advertisement--

அதிமுக ஆட்சியில் நிறுத்தப்பட்ட பொருட்கள் ரேஷன் கடைகளில் மீண்டும் வழங்க திமுக அரசு திட்டம்…!!! மகிழ்ச்சியில் மக்கள்.

சட்டப்பேரவையில் உணவு மற்றும் உணவுபொருட்கள் வழங்கல் துறை மானியக் கோரிக்கை மீது நடந்த விவாதத்துக்கு பதில் அளித்து அமைச்சர் சாரங்கபாணி பேசியது. தமிழகத்தில் ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய்க்கு வழங்கியவர் கலைஞர். 2007 ஆம் ஆண்டு தான் பாமாயில், துவரம்பருப்பு, உளுத்தம்பருப்பு, ஆட்டா, மசாலா என மக்களுக்குத் தேவையான ஊட்டச் சத்துள்ள பொருட்கள் சிறப்பு பொது விநியோகத் திட்டத்தில் வழங்கியது திமுக அரசு.

ஆனால், இடையில் வந்த ஆட்சியாளர்கள் ஆட்டா மாவையும் விட்டுவிட்டார்கள். உளுத்தம் பருப்பையும் விட்டுவிட்டார்கள். அதே நேரத்தில் மசாலா பொருட்களையும் விட்டுவிட்டார்கள். இப்போது அதிமுக உறுப்பினர் சேர்க்கை எப்போது படிப்பீர்கள் என்று கண்டிப்பாக முதல்வர் ஏற்கனவே சொல்லியிருக்கிறார். சொன்ன வாக்குறுதியை எல்லாம் நிறைவேற்றுவோம் என்று சொல்லியிருக்கிறார். அரிசியின் தரம் இல்லை என்று இங்கே பேசிய உறுப்பினர்கள் சொன்னார்கள்.

அவற்றை ஆய்வு செய்து பார்த்ததில் கடந்த காலத்தில் நேரடி கொள்முதல் நிலையத்தில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகபட்ச உயரம் உள்ள நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதுபோன்ற தரமற்ற வகையில் ஒன்றரை லட்சம் டன் அரிசி இருப்பது கண்டறியப்பட்டது. இந்த அரசின் பொது மக்களுக்கு வழங்குவது நிறுத்தப்பட்டது. நெல் கொள்முதல் பணியை கண்காணித்திட அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இதுவரை 41 லட்சம் 30 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

நேற்றுவரை விவசாயத்திற்கு ஒரு சல்லி பைசா கூட பாக்கி வைக்கப்படவில்லை. 2 ஆயிரத்து 270 கோடியே இருபத்தி ஒரு லட்சம் ரூபாய் விவசாயிகளுக்கு இன்று வரை வழங்கப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் துவரம் பருப்பு, பாமாயில் கொள்முதலில் அரசு பெரிய இழப்பு ஏற்பட்டது.

20 ஆயிரம் மெட்ரிக் டன் துவரம் பருப்பு கிலோ 70 முதல் 80 வரையிலான வரையில் ஒப்பந்தப் புள்ளி இறுதி செய்யப்பட்டு கொள்முதல் செய்யப்பட்டது. தற்போது ஒரு மாதத்தில் கொள்முதல் செய்யப்பட்ட பருப்பு கொள்முதலில் மட்டும் அரசுக்கு 74.75 கோடி மீதம் ஆகியுள்ளது. ஒரு மாதத்தில் பாமாயில் கொள்முதலில் மட்டும் அரசுக்கு 5.28 கோடி மீதம் ஏற்பட்டு இருக்கிறது எனக் கூறியுள்ளார்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles