Saturday, June 1, 2024
-- Advertisement--

குடும்பமே மருத்துவமனையில் இருக்கும் போது திமுக பொது செயலர் துரைமுருகன் வீட்டில் மர்ம நபர்கள் கொள்ளை முயற்சி..!!! நடந்து வரும் தீவிர விசாரணை.

திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அவர்கள் கொரோனவால் பாதிக்கப்பட்டு தற்பொழுது சிகிச்சை பெற்று வரும் நிலையில் இன்று காலை தான் மருத்துவமனையில் இருந்து அறிக்கை ஒன்று வெளியானது அதில் துரைமுருகன் அவர்களுக்கு கொரோனாவிற்கான சிகிச்சை சரியான முறையில் கொடுத்து தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளது என்று மருத்துவமனை தரப்பிலிருந்து அறிக்கை ஒன்று வெளியானது.

அவர் குடும்பத்தில் உள்ளவர்களும் மருத்துவமனையில் இருந்து வரும் இந்த நேரத்தில் துரைமுருகன் அவர்களின் பண்ணை வீட்டில் கொள்ளை முயற்சி செய்துள்ளார்கள்.

திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரியில் உள்ளது திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அவர்களின் பண்ணை வீடு சுமார் 25 ஏக்கரில் அமைந்துள்ள அந்த வீட்டில் இரவு நேரத்தில் மர்ம நபர்கள் வீட்டுக்குள் நுழைய இரண்டு கதவுகளை உடைத்துள்ளனர் அங்கு பணம் நகை எதுவும் இல்லாததனால் ஏமாற்றமடைந்த கொள்ளையர்கள் திரும்ப சென்றுள்ளனர்.

சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் சென்று பார்த்தபோது இரண்டு கதவுகளை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளை அடிக்க முயற்சிப்பது தெரியவந்தது உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஏலகிரி போலீசார் கைரேகை நிபுணர்கள் உதவியுடன் கொள்ளையில் ஈடுபட்டவர்களை தேடிவருகின்றனர். கொள்ளை சம்பவம் தொடர்பாக விசாரணை தீவிரமாக நடந்து வருகிறது.

துரைமுருகன் அவர்களின் குடும்பமே மருத்துவமனையில் இருக்க கொள்ளையர்கள் கைவரிசை காட்ட நினைத்தது அந்த பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles