Sunday, May 19, 2024
-- Advertisement--

ஏ.ஆர்.முருகதாஸ் இந்த படத்தில் தான் முதலில் நடித்துள்ளார்..! வீடியோ மற்றும் புகைப்படம் உள்ளே…!

சிறு வயதில் இருந்தே கதை எழுதுவதில் மிகவும் ஆர்வமாக உள்ளவர் இயக்குனர் ஏ.ஆர் .முருகதாஸ். முதலில் இவர் எழுதிய சிறு சிறு படைப்புகள் பிரபல வார இதழில் வெளிவந்தன.

அதன் பிறகு சினிமாவில் கதை எழுதும் பணியில் சேர்ந்தார், அதனை தொடர்ந்து ரட்சகன் படத்தில் இணைந்தார், பின் இயக்குனர் எஸ்.ஜே. சூர்யாவிடம் உதவி இயக்குனராக நடிகர் விஜய் நடித்த குஷி படத்தில் அறிமுகம் ஆனார்.

எஸ்.ஜே.சூர்யாவிடம் பணியாற்றியதை தொடர்ந்து சூர்யா நடிகர் அஜித்திடம் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸை அறிமுகம் செய்ய இவர் அஜித்தை வைத்து தனது முதல் படமான தீனாவை இயக்கினார். இப்படத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து இவர் தொடர்ந்து ரமணா, கஜினி, கத்தி, 7 ஆம் அறிவு, சர்க்கார் போன்ற படங்களை இயக்கினார்.

இந்நிலையில் கஜினி படத்திற்கு மக்கள் மத்தியில் கிடைத்த வரவேற்பினை இப்படத்தை ஹிந்தியிலும் இயக்கினார். இதனால் இந்திய அளவில் பிரபல இயக்குனர்களில் ஒருவரானார். இயக்குனர் மட்டுமின்றி மான் கராத்தே, ராஜா ராணி, வத்திக்குச்சி போன்ற படங்களை தயாரிக்கவும் செய்தார்.

இந்நிலையில் இவர் விஜய் நடித்த கத்தி படத்தில் ஒரு காட்சியில் திரையில் தோன்றுவார், ஆனால் இந்த படத்திற்கு முன்பே அப்பாஸ் நடித்த பூவே பூச்சூடவா படத்தில் ஒரு சிறு வேடத்தில் சில நிமிடங்கள் தோன்றியுள்ளார்.

இது குறித்த புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் உலா வருகின்றன.இதோ அந்த வீடியோ மற்றும் புகைப்படம்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles