Monday, May 20, 2024
-- Advertisement--

பிரபல இயக்குனர் வெங்கட் பிரபுவின் தாய் மரணம்..!!! சோகத்தில் தமிழ் திரையுலகம்.

தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குனர்களில் ஒருவர் கங்கை அமரன் அவர் இயக்குனர் மட்டுமல்லாமல் பாடலாசிரியராகவும் பல திரைப்படங்களில் பாடல்கள் இசையமைத்துள்ளார் இவர் தமிழ் சினிமாவிற்கு பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார்.

இயக்குனர் கங்கை அமரனின் சகோதரர் இசைஞானி இளையராஜா ஆவார் மேலும் கங்கை அமரனுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர் அவர் இயக்குனர் வெங்கட்பிரபு மற்றும் நடிகர் பிரேம்ஜி அமரன் ஆவார்.

அவரது மூத்த மகன் வெங்கட் பிரபு பல வெற்றிப் படங்களை தமிழ் சினிமாவில் இயக்கி பெரிய ஹிட் கொடுத்துள்ளார் அவர் இயக்கிய மங்காத்தா, சென்னை 600028 , கோவா போன்ற திரைப்படங்கள் மாபெரும் வெற்றி பெற்று மக்களிடம் பெரிய வரவேற்பை பெற்றது.

வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியாகும் படங்களில் அவரது தம்பியான பிரேம்ஜி அமரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பார் அவர் தற்போது சிம்புவை வைத்து இயக்கிவரும் மாநாடு திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் கங்கை அமரன் மனைவி வெங்கட் பிரபு மற்றும் பிரேம்ஜி தாயாரான மணிமேகலை அவர்கள் சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் நேற்று இரவு உடல்நலக்குறைவால் சிச்சைக்காக அனுமத்திக்கப்பட்டார். சில மணி நேரங்களில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த செய்தி அறிந்து திரையுலகினர் அனைவருக்கும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles