Friday, May 3, 2024
-- Advertisement--

சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தை முதல் நாளே பார்த்துவிட்டு பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் என்ன சொன்னார் தெரியுமா..!!!

சிவகார்த்திகேயன் நடித்து இன்று வெளியான டாக்டர் திரைப்படம் மாபெரும் வரவேற்பை ரசிகர்களிடம் பெற்று நல்ல வசூலை செய்து வருகிறது. திரையரங்கின் நிலையைப் பார்த்து சிரித்தவர்களை இன்று திரையரங்குக்குள் வரவழைத்து சிரிக்க வைத்துள்ளார் இயக்குனர் நெல்சன் திலீப்குமார்.

சிவகார்த்திகேயன் கவுண்டர் கொடுக்கவில்லை என்றாலும் அவரைச் சுற்றியுள்ளவர்கள் கொடுக்கும் கவுண்டரில் தியேட்டரே வயிறு குலுங்க சிரிக்கிறது. ஒரு சீரியசான கதையில் நகைச்சுவையை புகுத்தி நெல்சன் டிலிப்குமர் கையாண்ட விதம் மட்டும் அல்லாமல் ரசிகர்களை திருப்திப்படுத்தி பெரிய வெற்றியையும் டாக்டர் படம் பெற்றுள்ளது.

படத்தைப் பார்த்த பிரபலங்கள் சிவகார்த்திகேயன் மற்றும் நெல்சன் திலீப்குமார் அவர்களை பாராட்டி வருகிறார்கள் இந்நிலையில் பிரம்மாண்ட இயக்குனர் என்று ரசிகர்களால் போற்றப்படும் இயக்குனர் சங்கர் அவர்கள் டாக்டர் திரைப்படத்தை தனது குடும்பத்துடன் சென்று பார்த்துள்ளார் படத்தை பார்த்த சங்கர் டாக்டர் படத்தை பாராட்டி புகழ்ந்து தள்ளியுள்ளார்.

இந்த கோவிட் நேரத்தில் டாக்டர் எங்களுக்கு சிறந்த சிரிப்பு மருந்து கொடுத்துள்ளார் என்று கூறிய சங்கர் இயக்குனர் நெல்சன் சிவகார்த்திகேயன் மற்றும் அனிருத் அவர்களை பாராட்டி உள்ளார். தியேட்டரில் இந்தப் படத்தைப் பார்த்தது சந்தோஷம் என்றும் குறிப்பிட்டுள்ளார். பிரம்மாண்ட இயக்குனரே படத்தை பார்த்து வியந்து பாராட்டி உள்ளதால் படக்குழுவினர் செம குஷியில் இருக்கிறார்கள்.

எனக்கு மிகவும் பிடித்த சங்கர் சார் அவர்கள் முதல் முதலாக பாராட்டியதற்கு நன்றி. இந்த படத்தை மறக்கமாட்டேன் மிக்க நன்றி சார் என்று கூறியுள்ளார் சிவகார்த்திகேயன்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles