Friday, May 3, 2024
-- Advertisement--

பிரமாண்டமாக நடந்துமுடிந்த பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள் ஐஸ்வர்யா திருமணம்..!!! திருமணத்தில் கலந்து கொண்ட தமிழக முதல்வர்.

இயக்குனர் சங்கர் தமிழ் சினிமாவில் இயக்குனராக வேண்டும் என்ற லட்சியத்தோடு கும்பகோணத்தில் இருந்து கிளம்பி வந்து சென்னையில் முதலில் தளபதி விஜய்யின் தந்தை எஸ்ஏ சந்திரசேகர் இடம் அசிஸ்டெண்ட் ஆக பணியாற்றியவர். அதன்பின் ஜென்டில்மேன் என்ற படத்தை எழுதி இயக்கினார். அந்தப் படத்தில் அர்ஜுன் ஹீரோவாக நடித்திருந்தார் முதல் படமே அமோக வெற்றி பெற்று மக்களிடம் பெரிய வரவேற்ப்பை பெற்றது.

அதனைத் தொடர்ந்து காதலன் இந்தியன் ஜீன்ஸ் போன்ற படங்களை இயக்கினார் அவர் இயக்கிய படங்கள் அனைத்தும் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது. முதல்வன் என்ற படத்தை இயக்கினார் ஒரு முதல்வர் எப்படி மக்களுக்காக செயல்பட வேண்டும் என்பதற்கு முன்னுதாரணமாக அந்த படம் இன்றுவரை உள்ளது அதுபோல அவர் தொடர்ந்து இயக்கிய படங்கள் பெரிய ஹிட் குறிப்பாக அந்நியன் , சிவாஜி, எந்திரன், நண்பன் போன்ற படங்கள் மாபெரும் வெற்றி பெற்றது.

இவருடைய படங்களில் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் பிரம்மாண்டமும் இருக்கும் என்ற ஒரு பார்முலாவை வைத்துள்ளார். அதனால் தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர் என்று அழைக்கப்படுகிறார்.

ஷங்கர் ஐ என்ற படத்திற்காக கடுமையாக உழைத்தார் . விக்ரம் மற்றும் ஷங்கருக்கு இது திருப்புமுனையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது ஆனால் அந்த படம் பெரிய அளவிற்கு வெற்றியைப் பெறவில்லை என்பதே உண்மை. அதுபோல 2 .0 என்ற படத்தை ஷங்கர் இயக்கினார் படம் பிரம்மாண்டமாக இருந்தாலும் அதை அந்த அளவு இல்லாததால் அந்தப் படமும் பெரிய அளவில் இல்லை தற்பொழுது உலக நாயகன் கமலஹாசனை வைத்து இந்தியன்2 என்ற படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார்.

இன்று ஷங்கரின் அவர்களின் அன்பு மகள் ஐஸ்வர்யாவின் திருமணம் நடந்து முடிந்தது. இயக்குனர் ஷங்கரின் மகள் ஐஸ்வர்யா புதுச்சேரி கிரிக்கெட் அணியின் கேப்டனான ரோஹித் தாமோதரனை காதலித்து வந்தார் காதலுக்கு க்ரீன் சிக்னல் காட்டிய சங்கர் தன் மகளுக்கு பிடித்த மணமகனே திருமணம் செய்து கொடுக்க ஒப்புக்கொண்டார்.

இன்று பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் மகளின் திருமணம் பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது இந்த திருமண விழாவிற்கு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் மற்றும் அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் இருவரும் சென்றிருந்தனர்.

திருமணம் பிரமாண்டமாக நடந்தாலும் விதிமுறைகளை மீறாமல் அனைவரும் மாஸ்க் அணிந்து இறுதிவரை இருந்தனர்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles