Friday, May 17, 2024
-- Advertisement--

கதாநாயகியாக அறிமுகமாகும் இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி…!!! இயக்குனர் யார் தெரியுமா.

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் ஷங்கர். இயக்குனர் சங்கர் படங்கள் என்றாலே பிரமாண்டம் என அனைவரும் அறிந்ததே. பிரபல இயக்குனர் ஷங்கர் ஈஸ்வரி தம்பதிக்கு ஐஸ்வர்யா, அதிதி என்ற 2 மகள்கள் உள்ளனர். இவ்விருவரும் டாக்டருக்கு படித்தவர்கள். தவிர அர்ஜித் என்ற மகன் இருக்கிறார்.

சமீபத்தில் ஐஸ்வர்யாவுக்கு திருமணம் நடந்தது. இந்நிலையில் அதிதி ஷங்கர் தமிழ் படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகிறார். சூர்யா-ஜோதிகா இணைந்து தயாரிக்கும் “விருமன்” என்ற இப்படத்தை கொம்பன் முத்தையா இயக்குகிறார். இதில் கார்த்திக் ஜோடியாக அதிதி சங்கர் நடிக்கிறார்.

இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். நடிகர் கார்த்திக் கொம்பன் முத்தையாவுடன் இரண்டாவது திரைப்படம். இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles