Monday, May 20, 2024
-- Advertisement--

KGF ஹீரோவை தலையில் தூக்கி வைத்து கொண்டாடியது தமிழ் மக்கள் தான்…!!! KGF வருவதற்கு முன் யாஷ் நடித்த படங்கள் தெரியுமா..? பேரரசு ஆவேசம்.

தமிழ் சினிமாவில் ஒரு நேரத்தில் ஹாட்ரிக் வெற்றி படங்களை கொடுத்த இயக்குனர்கள் பட்டியலில பேரரசும் ஒருவர். பேரரசு படங்களில் பஞ்ச் டயலாக்குகள் அனல் பறக்கும் அதுபோல சுவாரசியமான ஆக்சன் காட்சிகள் இருக்கும் வில்லன்களுக்கு அவர் வைக்கும் பெயரே வித்தியாசமாக இருக்கும். பேரரசு படத்தில் முக்கியமாக பேரரசு அவர்களின் காட்சிகளும் இருக்கும்.

மார்க்கெட் கொஞ்சம் டல்லாக போகும் நேரத்தில் விஜயை வைத்து திருப்பாச்சி சிவகாசி என்று மாபெரும் வெற்றி படத்தை கொடுத்து விஜய் அனைத்து தரப்பு ரசிகர்களும் ரசிக்கும் படி படம் எடுத்தவர் பேரரசு.

பேரரசு அவர்கள் ஹெலன் என்ற படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசினார். அப்போது கன்னட படமான கேஜிஎப் பெரிய வெற்றியை தமிழ்நாட்டில் பெற்றதற்கு காரணம் தமிழர்கள் தான். யாருக்கு திறமை இருக்கோ அவர்களை ஏற்றுக் கொள்பவர்களே தமிழர்கள். அது வேறு யாருக்கும் இந்த பக்குவம் வராது. தமிழனாக இருப்பதில் பெருமை பட வேண்டும்.

கே ஜி எஃப் ஹீரோ தலையில் வைத்து கொண்டாடியது தமிழர்கள் தான் தமிழர்களைப் பொறுத்தவரை யாருக்கு திறமை இருக்கிறதோ அவர்களை வரவேற்பார்கள் நீ இந்த மொழிக்காரன் கர்நாடகன் மலையாளி என்றெல்லாம் பார்க்க மாட்டார்கள். சில ஆட்கள் என்ன செய்தார்கள் தமிழ் இயக்குனர்கள் பற்றி சில இழிவாக பேச ஆரம்பித்தார்கள்.

கே ஜி எஃப் திரைப்படங்கள் எல்லாம் வெளியாவதற்கு முன்பு தமிழ் படங்களை ரீமேக் செய்து நடித்தார் யாஷ்.

Yash Remake Kalavani in Kannada

விமல் ஹீரோவாக நடித்த களவாணி படத்தை கன்னடாவில் ரீமேக் செய்து யாஷ் நடித்தார் அதுபோல சுந்தரபாண்டியன் என்ற சசிகுமாரின் படத்தை ரீமேக் செய்து அதிலும் ஹீரோவாக நடித்திருந்தார்.

தமிழர்கள் எப்போதும் திறமை உள்ளவர்களை மதித்து தலையில் தூக்கி கொண்டாடுவார்கள். தமிழ் படங்கள் சாதனை செய்யாதா என்று கேட்டவர்களுக்கு கமலஹாசனின் விக்ரம் சமீபத்தில் மாபெரும் சாதனையை செய்தது என்று கூறிய அவர்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் அரசியலுக்கு வரும்போதுதான் அவர் கன்னடக்கார் என்றெல்லாம் கூறினார்கள். அதற்கு முன் வரை அவரை சூப்பர்ஸ்டார் ஆக மட்டும் தான் பார்த்தார்கள் ரசிகர்கள். மலையாளி கன்னடன் என்றெல்லாம் பார்க்கவில்லை பிடித்து விட்டால் கொண்டாடுகிறோம் தமிழர்களின் இந்தப் பக்குவம் வேறு யாருக்கும் வராது என்று கூறியிருந்தால் பேரரசு.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles