Wednesday, May 8, 2024
-- Advertisement--

சூர்யா 40 படத்தை ரசிகர்கள் கொண்டாடுவார்கள்- இயக்குனர் பாண்டிராஜ்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் சூர்யா. சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான சூரரைப்போற்று திரைப்படம் மிகப்பெரிய ஹிட் அடித்தது. இந்த திரைப்படத்தில் டெக்கான் ஏர்லைன்ஸ் ஜி.ஆர்.கோபிநாத் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம். ஒடிடி தளத்தில் வெளியாகி முதல்முறையாக அதிக வசூலைப் பெற்ற திரைப்படம் என புகழைப் பெற்றது.

அதைத் தொடர்ந்து நடிகர் சூர்யா அடுத்தடுத்து மூன்று திரைப்படங்களில் கமிட்டாகியுள்ளார். இதில் வெப் தொடர் ஒன்றும் அடக்கம். நவரசா என பெயரிடப்பட்ட இந்த வெப் தொடரில் கௌதம் மேனன் இயக்கத்தில் நடிக்கிறார். இதையடுத்து வெற்றிமாறனின் வாடிவாசல் படத்திலும், இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு தற்காலிகமாக சூர்யா 40 என படக்குழு பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இதில் சூர்யா ஜோடியாக சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்த பிரியங்கா அருள் மோகன் கதாநாயகியாக நடிக்கிறார்.சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், D.இமான் இசையில் சூர்யா40 திரைப்படம் படப்பிடிப்பு பணிகள் நடைபெற உள்ளதாக அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. படத்தில் முக்கியமான கதாபாத்திரங்களில் சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், சூரி போன்றவர்களும் நடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இப்படம் குறித்து இயக்குனர் பாண்டியராஜன் தனது டுவிட்டரில் சூர்யா 40 பற்றி சில தகவல்களை வெளியிட்டுள்ளார். கார்த்திக் ரசிகர்களுக்கு எப்படி ஒரு கடைக்குட்டி சிங்கம் அமைந்ததோ அதே போல் சூர்யா ரசிகர்களுக்கு இப்படம் சூர்யா 40 மிகுந்த உற்சாகத்தையும் அவர்கள் கொண்டாடும் விதமாகவும் இருக்கும். இப்படத்திற்காக தலைப்பு முதல் படத்தில் ஒவ்வொரு காட்சியையும் ரசிகர்களுக்கு சிறப்பாக வழங்குவதற்காக ஒவ்வொரு கதாபாத்திரத்தின் அசைவையும் மிக கவனமாக செதுக்கி வருகிறேன் என பாண்டியராஜ் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles