Friday, May 3, 2024
-- Advertisement--

மாஸ்டர் படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்க்கு கொரோனா..!!! தனியார் மருத்துவமனையில் அனுமதி..!!!

தமிழ் சினிமாவிற்கு மாநகரம் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் தான் லோகேஷ் கனகராஜ். வித்தியாசமான திரைக்கதையை கையாண்டு வெற்றி பெற்றவுடன் நடிகர் கார்த்தி நடிக்கும் கைதி என்ற படத்தை இயக்கினார் அந்தப் படமும் மாபெரும் வெற்றியைப் பெற்று நல்ல வசூல் செய்தது.

மாநகரம் முடிந்தவுடனே விஜய்க்கு ஒன்லைன் ஒன்றை சொன்னார் லோகேஷ் அந்த ஒன்லைன் பிடித்துப்போய் விஜய்க்காக ரெடி செய்த கதைதான் மாஸ்டர். கொரோனா நேரத்தில் மூடிக்கிடந்த தியேட்டர்கள் மறுபடியும் இயல்பு நிலைக்கு திரும்புமா என்று பயத்தோடு இருந்த தியேட்டர் உரிமையாளர்களுக்கு பெரிய மகிழ்ச்சியை கொடுத்தது மாஸ்டர் படத்தின் வசூல்.

மாஸ்டர் படம் விஜய்க்கு மட்டுமல்லாமல் சரியான நேரத்தில் வந்து தமிழ் திரை உலகத்திற்கு ஒரு பெரிய எனர்ஜி கொடுத்தது. நீண்ட நாட்களுக்கு பிறகு மக்கள் கூட்டம் தியேட்டரில் நிரம்பி வழிந்தது.

தற்பொழுது லோகேஷ் கனகராஜ் உலகநாயகன் கமலை வைத்து விக்ரம் பட வேலைகளில் மும்முரமாக இறங்கி உள்ள நேரத்தில் சில நாட்களுக்கு முன்பு உடல்நிலை சரியில்லை என்று மருத்துவமனைக்கு சென்றுள்ளார் அப்போது அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

லோகேஷ் கனகராஜ் அவர்களுக்கு கொரோனா இருப்பது உறுதியும் செய்யப்பட்டது அதனை உறுதிப்படுத்தும் விதமாக தற்பொழுது ட்விட்டரில் கொரோனா டெஸ்ட் எடுத்ததாகவும் அவருக்கு கொரோனா இருப்பதாகவும், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் மருத்துவர்கள் தன்னை நன்றாக பார்த்துக் கொள்வதாகவும் சீக்கிரம் குணமடைந்து வருகிறேன் என்று பதிவிட்டு இருந்தார்.

இதனைப் பார்த்த ரசிகர்கள் ட்விட்டரில் ஆறுதல் சொல்லி வருகின்றனர்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles