தமிழில் பிரபுதேவாவிற்கு அடுத்து நடனத்தில் சிறந்து விளங்குபவர் லாரன்ஸ். இவர் நடன இயக்குனராக இருந்து மேலும் நடிகராக மாறி தற்போது இயக்குனராக வலம் வருகிறார். தமிழகத்தில் முதல் முதலில் அம்மாவிற்கு கோயில் கட்டிய நடிகர் இவர் தான்.
இவர் இயக்கிய முனி படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றதை தொடர்ந்து இவர் காஞ்சனா, காஞ்சனா 2 போன்ற படங்களை இயக்கினார். இதில் இவர் இயக்கிய காஞ்சனா படத்தின் முதல் பாகம் போல் ஹிந்தியில் ரிமேக் செய்ய முடிவு செய்த இவர் அதற்கான வேலைகளை ஆரம்பித்தார்.
இதில் ஹிந்தி நடிகர் அக்ஷய் குமார் நடித்துள்ளார். இந்த படத்திற்காக இவர் ரூ 50 கோடி சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது. இதன் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனர் ஷங்கரை விட இவர் தான் அதிகம் சம்பளம் வாங்குவராக கருதப்படுவார்.