தற்போது சினிமா பிரபலங்கள் மறைவு அதிகம் ஆகி கொண்டே வருகிறது. அந்நிலையில் சமீபத்தில் நடிகர் சேதுராமன், இர்பான் கான் ஆகியோர் இளம் வயதிலேயே இறந்தது திரைஉலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் மலையாளத்தில் கடந்த மார்ச் மாதம் வெளியான படம் கோழிப்போரு. இப்படத்தை ஜிபித் ஜார்ஜ், ஜினோய் ஜனார்த்தனன் ஆகிய இரட்டை இயக்குனர்கள் இணைந்து இயக்கி இருந்தனர். இந்த படம் கொரானோ காரணமாக வெளியிட்ட சில நாட்களிலேயே திரையரங்கில் இருந்து எடுக்கப்பட்டது.
இந்நிலையில் இப்படத்தின் இயக்குனரான ஜிபித் ஜார்ஜ் நேற்று காலை திடீரென நெஞ்சு வலி ஏற்பட்ட நிலையில் கண்டுகொள்ளாமல் இருந்துள்ளார், பின்னர் நேற்று மலை திடீரென மயங்கி விழுந்த அவரை மருத்துமனைக்கு அழைத்து செல்லும் வழியிலேயே இறந்து விட்டார்.
இவரது திடீர் மரணம் திரையுலகினரை அதிர்ச்சி அடையச்செய்துள்ளது.