Saturday, May 4, 2024
-- Advertisement--

அதிமுக ஆட்சியில் சென்னையில் மழை நீர் தேங்காமல் இருக்க 900 கோடிக்கு மேல் மத்திய அரசிடம் வாங்கியது எங்கே..? இயக்குனர் சேரன் ஆவேசம்.

சென்னையில் கடுமையான மழை பெய்து வெள்ளப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர் சில இடங்களில் அளவுக்கு மீறி மழைநீர் சாலையில் தேங்கி நிற்பதால் பொதுமக்கள் வெளியே செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

சிலர் தேங்கி நிற்கும் தண்ணீரில் நடந்து செல்கின்றனர் பல இடங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. மழை நீர் தேங்கியுள்ளதால் எந்த ஒரு அசம்பாவிதம் நடந்து விடக் கூடாது என்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 40 டிரான்ஸ்பார்மர்களில் இருந்து மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

இன்னும் சில நேரங்களில் செம்பரபாக்கம் ஏரி திறக்க இருக்கிறார்கள் செம்பரபாக்கம் ஏரி திறந்தால் வெள்ள அபாயம் ஏற்படும் என்று முன்கூட்டியே செம்பரபாக்கம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து மக்களை வேறு இடத்திற்கு அனுப்பி வருகிறார்கள்.

கொட்டும் மழையிலும் மழை தண்ணீரில் அரசு அதிகாரிகளுடன் களத்தில் இறங்கி ஆய்வு செய்து வருகிறார் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின்.

சென்னையில் பல இடங்களில் மழை தண்ணீர் தேங்கி நிற்கும் இந்நிலையில் இயக்குனர் சேரன் அவர்கள் தமிழக முதல்வருக்கு வேண்டுகோள் ஒன்றை வைத்து உள்ளார் அதில் அதிமுக ஆட்சியில் மழை பாதிப்பு வந்தால் தண்ணீர் தேங்காமல் வெளியிடத் திட்டம் தீட்டி சென்னைக்கு மட்டும் மத்திய அரசிடம் 900 கோடிக்கு மேல் வாங்கினார்களே அந்தத் திட்டத்தில் செயல்படுத்திய நகரமா இது. இந்த Fileஐ முதல்ல எடுங்க முதலமைச்சர் அய்யா என்று கூறியுள்ளார்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles