Sunday, May 5, 2024
-- Advertisement--

திண்டுக்கல் ஐ.லியோனிக்கு திமுகவில் முக்கிய பதவி…!!! அதிரடி காட்டும் தமிழக அரசு…!!!

திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த ஐ. லியோனின் சிறந்த ஆசிரியர், மேடைப்பேச்சாளர், இலக்கியச் சொற்பொழிவாளர், நகைச்சுவை பட்டிமன்ற நடுவர் என பல துறைகளில் திறமையானவர். தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின்( Textbook and Educational Services Corporation)புதிய தலைவராக திண்டுக்கல் ஐ.லியோனி நியமிக்கப்பட்டதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளுக்கு பாடப் புத்தகங்களை தயாரித்து அச்சிட்டு வினியோகம் செய்வதற்காக தமிழக அரசால் ஏற்படுத்தப்பட்ட ஒரு அரசு நிறுவனம் ஆகும்.

இக்கழகத்தின் மூலம் பாடநூல்கள் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு இலவசமாகவும், தனியார் பள்ளிகளுக்கு அரசு நிர்ணயிக்கும் கட்டணத்திலும் வழங்கப்படுகின்றன. ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை ஆங்கில வழி மற்றும் தமிழ் பாடநூல்கள், சிறுபான்மை மொழிப் பாட நூல்கள், ஆசிரியர் பட்டய பயிற்சி காண பாடப்புத்தகங்கள், மேல்நிலை பள்ளிக்கான தொழிற்கல்வி பாடப் புத்தகங்கள் மற்றும் பல் நுட்பக் கல்லூரி பாட புத்தகங்கள் ஆகியவை தயாரிக்கும் பணியை கழகத்தின் திறன்பட மேற்கொண்டு வருகிறது.

இந்த நிறுவனத்தில் பல்வேறு அரிய நூல்களை மறுபதிப்பு செய்வதோடு மொழிபெயர்ப்பு பணிகளையும் மேற்கொண்டு வருகிறது. அதிமுக ஆட்சியில் முன்னாள் அமைச்சர் வளர்மதி தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவராக இருந்தார். தற்போது திமுக தலைமையில் தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் புதிய தலைவராக திண்டுக்கல் ஐ.லியோனி முதல்வர் மு.க.ஸ்டாலின் நியமனம் செய்து உள்ளார். திண்டுக்கல் ஐ லியோனி கடந்த 2010ஆம் ஆண்டிற்கான கலைமாமணி விருது தமிழக அரசால் வழங்கப்பட்டது.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles