நடிகர் சந்தானம் ஹீரோவாக நடித்து வெளியாகியுள்ள திரைப்படம் டிக்கிலோனா. இந்த திரைப்படத்தை கார்த்திக் யோகி இயக்கியுள்ளார். இந்தப் படத்தை காண ரசிகர்கள் ஆவலாக இருந்தனர். அதனை பூர்த்தி செய்யும் விதமாக விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஓடிடி தளத்தில் திரைப்படம் வெளியாகி உள்ளது. நடிகர் சந்தானம் திரைப்படம் என்றால் காமெடிக்கும் பஞ்சமே இருக்காது என்பது அனைவரும் அறிந்ததே. இந்த படத்தை காண்பதற்காக ரசிகர்கள் ஆவலோடு காத்திருந்த நிலையில் படம் எப்படி உள்ளது என்பதை இங்கே காண்போம்.

நடிகர் சந்தானம் என்ற திரைப்படத்திற்காக தன் உடல் எடையை குறைத்து ஒரு புதிய முயற்சி எடுத்துள்ளார். பொதுவாக தமிழ் சினிமாவில் டைம் டிராவல் திரைப்படங்கள் வருவது வழக்கம்தான். இதற்கு முன்பு இன்று நேற்று நாளை திரைப்படம் டைம் டிராவல் மையமாக வந்து மாபெரும் ஹிட்டடித்தது. அதேபோல் இந்த திரைப்படமும் காமெடி கலந்த டைம் ட்ராவல் திரைப்படமாக டிக்கிலோனா வெளியாகியுள்ளது.

இந்த திரைப்படத்தில் சந்தானம் மூன்று கதாபாத்திரத்தில் மூன்று கெட்டப்பில் நடித்து அசத்தியுள்ளார். படத்தின் முதல் காட்சியில் ஹீரோயினை காதல் திருமணம் செய்துகொள்கிறார். ஆனால் திருமணத்தின் ஏழு ஆண்டுகளுக்கு பிறகு உறவில் விரிசல் ஏற்படுகிறது. அதனால் சந்தானம் ஒரு முடிவு செய்கிறார். தனது திருமணத்தை நடக்காமல் நிறுத்துவதற்காக டைம் டிராவல் செய்து திருமணத்தை நிறுத்த செல்கிறார். ஆனால் திருமணம் நடைபெற்ற காலத்திற்கு சென்று தனது வாழ்க்கையை மாற்ற நினைக்கிறார்.

ஆனால் சந்தானம் திருமணம் நடைபெறாமல் வேறு வாழ்க்கையை டைம் டிராவல் மூலம் தேர்வு செய்கிறார். ஆனால் அந்த வாழ்க்கையும் மிகவும் கடினமாக செல்கிறது. அதனால் மீண்டும் டைம் ட்ராவல் ஏறி திருமண நடக்கும் நாளைக்கே வந்து விடுகிறார். அதன் பிறகு மூவரும் எந்த வாழ்க்கையை தேர்வு செய்யப் போகிறார்கள் என்பதுதான் படத்தின் செகண்ட் ஆப்.

இந்த திரைப்படத்தைப் பார்த்தால் எந்த வாழ்க்கையை தேர்வு செய்தாலும் பிரச்சனை இன்பம் துன்பம் வர தான் செய்யும் அதிலிருந்து தப்பிக்க முடியாது என்பதை காமெடி கலந்த வித்தியாசமான சைன்ஸ்பிக்ஸன் அமைப்பில் சொல்லி இருக்கிறார். இயக்குனர் கார்த்திக் யோகி மொத்தத்தில் இந்த திரைப்படம் ஒரு ஜாலியான என்டர்டைன்மென்ட் திரைப்படமாக அமைந்துள்ளது. இப்போது இருக்கும் சூழ்நிலையில் மக்கள் சிரிக்கும் விதமாக இந்த திரைப்படம் உள்ளது. நீண்ட நாட்களுக்கு பிறகு சந்தானத்தின் கவுண்டர்கள் ரசிக்கும்படியாக உள்ளது.