Sunday, May 19, 2024
-- Advertisement--

ரஜினியின் மகள் ஐஸ்வர்யாவை விவாகரத்து செய்யும் தனுஷ்..!!! இருவரும் பிரிக்கிறோம் அவரே வெளியிட்ட அறிவிப்பு..!!! அதிர்ச்சியில் ரசிகர்கள்.

தனுஷ் தமிழ் சினிமாவின் நடிப்பின் அசுரன் என்று சொல்லலாம் அந்த அளவுக்கு தற்பொழுது தனது நடிப்பை மெருகேற்றிக் தமிழ், ஹிந்தி ,ஆங்கில படங்களில் நடிக்கும் அளவிற்கு தன் நடிப்பால் ஒரு பெரிய அங்கீகாரத்தை பெற்று உள்ளார்.

தனுஷ் 2004 ஆம் ஆண்டு நவம்பர் 18ஆம் தேதி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் மூத்த மகளான ஐஸ்வர்யா என்பவரை திருமணம் செய்து கொண்டார். தனுஷின் தீவிர ரசிகரான ஐஸ்வர்யா தனுஷின் திருடா திருடி படத்தை பார்த்துவிட்டு தனுஷ் அவர்களிடம் தனது காதல கூறியுள்ளார் அதன்பின் தனது வீட்டிலும் தனுசை திருமணம் செய்து வையுங்கள் என்று ரஜினியிடம் கூற ரஜினியும் தனுஷ் வீட்டோடு பேசி அதன் பின் இவர்களது திருமணம் பிரமாண்டமாக நடந்தது.

திருமணத்திற்கு பிறகு தனுஷ் அண்ணன் செல்வராகவனிடம் உதவி இயக்குனராக இருந்த ஐஸ்வர்யா 3 என்ற படத்தை எடுத்தார். அந்தப்படம் பெரிய அளவில் வெற்றியைப் பெறவில்லை என்றாலும் அந்த படத்தில் இடம்பெற்ற அத்தனைப் பாடல்களும் பெரிய ஹிட் பாடலாக அமைந்து 3 படத்தை இன்றும் ரசிகர்கள் நினைவில் வைத்துக் கொள்ளும்படி அமைந்தது.

தனுஷ் ஐஸ்வர்யாவிற்கு யாத்ரா லிங்கா என்று இரு ஆண் குழந்தைகள் இருக்கின்றனர். 18 ஆண்டுகளுக்குப் பின்னர் தனுஷ் ஐஸ்வர்யா தங்கள் பிரிவதாகவும் விவாகரத்து செய்ய உள்ளதாக அறிவித்து உள்ளனர். இந்த செய்தி ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் திரை உலக பிரபலங்கள் அனைவருக்கும் பெரிய அதிர்ச்சியை கொடுத்தது காரணம் சூப்பர் ஸ்டாரின் மருமகன் தனுஷ், மகள் ஐஸ்வர்யா என்று நன்றாகத்தான் போய்க்கொண்டிருந்தது என்ன பிரச்சினை என்று கோலிவுட் வட்டாரம் பேச தொடங்கியுள்ளது.

தற்பொழுது தனுஷ் அவர்களே தனது விவாகரத்து பற்றி அறிவிப்பை அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளார் அதில் நாங்கள் விவாகரத்து செய்ய உள்ளோம் 18 ஆண்டுகளாக நல்ல ஒரு நண்பராக, நல்ல பெற்றோராக இருந்துளோம் இப்போ இந்த முடிவை எடுத்திருக்கிறோம். நானும் ஐஸ்வர்யாவும் கலந்து எடுத்த முடிவுதான் இது. இந்த விஷயத்தில் எங்களுக்கு பிரைவசி தேவை. ஓம் நமச்சிவாய என்று தனுஷ் பதிவிட்டுள்ளார் அதே ஐஸ்வர்யா தனுஷ் அவர்களும் பதிவிட்டுள்ளார்.

இந்த செய்தியை பார்த்த ரசிகர்கள் ரஜினியின் இரண்டாவது பெண்ணுக்கு திருமணமாகி விவாகரத்து பெற்று தற்போது தான் இரண்டாவது திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கிறார் தற்பொழுது மூத்த பெண்ணும் விவாகரத்து பெறப்போகிறார் ரஜினி எப்படி தான் தாங்கி கொள்ள போகிறார் என்று வருத்தப்பட்டு வருகிறார்கள் ரஜினி ரசிகர்கள்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles