தனுஷ் தமிழ் சினிமா மட்டும் அல்ல ஹிந்தி ஹாலிவுட் என்று தனது நடிப்பால் கலக்கும் நடிப்பின் அசுரன். துள்ளுவதோ இளமை என்ற இளமை துள்ளலான படங்களில் நடித்து வந்த தனுஷ் அதனை தொடர்ந்து அதே போல படத்தில் ஆரம்பத்தில் நடித்து கொண்டு இருந்தார்.
அதன் பின் நல்ல நல்ல கதைகளை தேர்தெடுத்து நடித்து வரும் தனுஷ்.சில வருடங்களகக நடிக்கும் திரைப்படங்கள் மாபெரும் ஹிட் படங்களாக அமைந்து உள்ளது தமிழில் மட்டும் அல்ல ஹிந்தியிலும் தனுஷின் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து உள்ளது.
ஒரு பேட்டி ஒன்றில் தனுஷ் கல்வியின் அவசியத்தை பற்றி பேசி உள்ளார். அதில் அவர் கூறியது ” கல்வி ரொம்ப முக்கியம் தயவு செய்து நான் நிறைய இடத்தில அவமானாம்பட்டு இருக்கிறேன். முதலில் எனக்கு ஆங்கிலம் சரியாக பேச வராது. என்னுடைய மனைவி ஐஸ்வர்யா அவர்களின் தான் ஆங்கில புத்தகம் ஒன்றை கொடுத்து படிக்கச் சொன்னார். நானும் தினமும் அதை படிப்பேன் தூக்கமா வரும் அதே வழக்கமாக இருந்தது அதன் பின் எனக்கே ஆர்வம் வந்து அந்த புத்தகத்தை படிக்க ஆரம்பித்தேன்.
தெரியாத சில வரிகளை கோடிட்டு எனது மனைவியிடம் கேட்டு தெரிந்து கொள்ளுவேன். இப்போது ஓரளவிற்கு நன்றாக ஆங்கிலம் பேசுகிறேன். நான் படித்த முதல் ஆங்கில புத்தகம் DAVINCI CODE என்ற புத்தகம். இப்போது ஆயிரம் புத்தகத்திற்கு மேல் படித்துவிட்டேன் என்று தனுஷ் கூறி உள்ளார் இந்த பேட்டி கொடி படத்தின் ப்ரோமோஷன் போது கொடுக்கப்பட்டது.