Wednesday, May 22, 2024
-- Advertisement--

வேளாங்கன்னி சென்று அன்னை மாதாவை தரிசனம் செய்த பிரபல தொகுப்பாளினி DD ..!!! புகைப்படம் உள்ளே.

திவ்யதர்ஷினி கலகலப்பாக நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் ஒரு தொகுப்பாளினி விஜய் டிவியின் செல்ல பிள்ளை என்று சொல்லலாம் அந்த அளவிற்கு டிடி விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் எந்த ஒரு நிகழ்ச்சியாக இருந்தாலும் அதற்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து தொகுத்து வழங்குவார். இவரது கலகலப்பான பேச்சு மக்கள் அனைவரையும் எளிதில் கவர்ந்தது.

விசில் என்ற படத்தில் நடிகை ஷெரீனுக்கு சகோதரியாக நடித்திருந்தார் டிடி. டிடி சில வருடங்களுக்கு முன் தனது குடும்ப நண்பரான ஒருவரை பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு முன்பே விஜய் டிவி டிடி மற்றும் அவரது வருங்கால கணவர் வைத்து நம்ம வீடு கல்யாணாம் என்று ஒரு நிகழ்ச்சி நடத்தி அதனை ஒளிபரப்பாகியது.

2014 ஆம் ஆண்டு இவர்கள் திருமணம் நடந்தது . டிடி திரைநட்சத்திரங்கள் உடன் சகஜமாக பழகி வருபவர் அவருக்கு நிறைய திரை நட்சத்திர நண்பர்கள் இருக்கிறார்கள். திருமணமாகி தனது கணவருடன் நன்றாக போய்க் கொண்டிருந்த அவரது வாழ்க்கையில் ஒரு சில கருத்து வேறுபாடுகள் வந்து திருமணமான மூன்றாவது வருடத்திலேயே விவாகரத்தும் பெற்றார்.

விவாகரத்துக்கு காரணம் சுசிலீக்ஸ் வெளியிட்ட அந்த புகைப்படம் தான் என்று கூறிவருகிறார்கள் ஒரு சிலர். உண்மையில் என்ன நடந்தது என்பது டிடிக்கு மட்டுமே தெரியும்.

விவாகரத்துக்குப் பின் சின்னத்திரை பக்கம் வராமல் ஓய்வு எடுத்த டிடி மறுபடி தனது மனதை மாற்றிக் கொண்டு விஜய் டிவியில் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியை அதே புத்துணர்வுடன் வழங்க முயற்சி செய்தார். புதுப்புது நிகழ்ச்சிகள் டிடி காகவே கொண்டு வந்தனர் விஜய் டிவி.

தற்பொழுது DD தனக்கு ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் வெளியூர் சென்று அதனை புகைப்படமாக வெளியிட்டு வருவார். சமீபத்தில் வேளாங்கண்ணி சென்று அன்னை மாதாவை தரிசித்த டிடி கையில் மாலையுடன் கோயிலில் புகைப்படம் எடுத்து அதனை வெளியிட்டுள்ளார். எல்லா மதத்தினரும் வேளாங்கண்ணி தனது குடும்பத்தோடு சென்று அன்னை மாதாவை தரிசிப்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles