தற்போது ஊரடங்கு காரணமாக பிரபலங்கள் பலம் எவ்வாறு பொழுதை கழிப்பது என்று தெரியாமல் திணறி வருகின்றனர். வீட்டு வேலை செய்தல், வீட்டை சுத்தம் செய்தல் என பல முயற்சிகள் செய்து எல்லாம் வெறுத்துவிட்டன.
இந்நிலையில் எப்போது வேலைக்கு செல்வது, வெளியே செல்வது என பல மக்கள் தவித்து வருகின்றனர், பல வீட்டில் இருக்கும் பெண்கள் ஓய்வு எப்போது கிடைக்கும் என காத்து இருக்கின்றனர். இந்நிலையில் கிரிக்கெட் வீரர்களும் தற்போது வீட்டில் பொழுதை கழித்து வருகின்றனர்.
இந்நிலையில் பிரபல ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமீப காலமாக மிகவும் ஆர்வமாக இருந்து வருகிறார். இந்நிலையில் இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன் மனைவி மற்றும் குழந்தைகளுடன் கமல் நடித்த தேவர் மகன் படத்தில் வரும் இஞ்சி இடுப்பழகி பாடலுக்கு டிக் டாக் செய்து வீடியோ வெளியிட்டுள்ளார்.
இந்த வீடியோ பார்த்து ரசிகர்கள் தலைவா தமிழ் பாடலுக்கு நடனமா. சூப்பர் என கமெண்ட் செய்து வருகின்றனர்.