Monday, May 20, 2024
-- Advertisement--

இனி டாஸ்மார்க் கடைகளில் கிரெடிட் கார்ட், டெபிட் கார்டு வசதிகள்..! அரசு அறிவிப்பு…!

சென்னையில் இன்று டாஸ்மாக் மேலாண்மை இயக்குனர் கிர்லோக்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது ” தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் சார்பில் 5 ஆயிரத்து 330 மதுபான கடைகள் செயல்பட்டு வருகின்றன. அனைத்து மதுபான கடை களிலும் மின்னணு விற்பனை எந்திரங்கள் இதற்காக வங்கிகளிடம் ஒப்பந்தம் கோரப்பட்டு உள்ளது.

இந்த ஒப்பந்தத்தில் 7 வங்கிகள் கலந்துகொண்டன. அவற்றில் ஐசிஐசிஐ வங்கி மற்ற வகைகளை விட குறைவான ஒப்பந்தப்புள்ளி தொகை பதிவிட்டதால் முன்னணி மின்னணு எந்திரங்கள் விற்பனைக்கு இது தேர்வாகியுள்ளது. டாஸ்மார்க் இயக்குனர் குழுமம் ஐசிஐசிஐ வங்கியுடன் இது தொடர்பாக ஒப்பந்தம் செய்ய கொள்ள டாஸ்மாக் எடுத்து அனுமதி வழங்கியுள்ளன.

மின்னணு இயந்திரங்கள் வந்து விட்டால் இனிமேல் வாடிக்கையாளர்கள் அதற்குரிய தொகையை டெபிட் கார்டு, கிரெடிட் கார்ட் வசதிகளின் மூலம் இன்டர்நேஷனல் கார்டு ஆகியவற்றை வசதிகள் மூலமும் பணம் செலுத்தலாம்.

மின்னணு விற்பனை எந்திரங்கள் நிறுவும் பணி சுமார் இரண்டு மாதங்களில் நிறைவடையும். டாஸ்மாக் கடைகளில் அனைத்து பணியாளர்களுக்கும் இந்த மின்னணு விற்பனை கருவியை பயன்படுத்த பயிற்சி அளிக்கப்படும்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles