Monday, May 20, 2024
-- Advertisement--

கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் அடுத்த அறிவிப்பு வரும்வரை ரயில்வே இயங்காது என ரயில்வே அமைச்சர் தெரிவித்துள்ளார்..!

கொரோனா கிருமித்தொற்று காரணமாக உலகெங்கும் உள்ள அனைத்து நாடுகளிலும் மக்கள் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர் . இந்நிலையில் சுகாதார அமைச்சகம் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதில் அனைத்து துறைகளும் கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் கொரோனா தாக்கம் குறைவால் ஒருசில துறைகளில் சேவைகளை துவங்க ஆரம்பித்துள்ளன இந்த வரிசையில் ரயில்வே சேவைகள் தொடங்கின. அதில் புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல சிறப்பு ரயில்கள் மட்டுமே இயக்கப்பட்டு வந்தன. இதனிடையே ஒரு சில வாரங்களுக்கு குறைந்த அளவில் ரயில்வே சேவைகள் தொடங்கிய நிலையில் கொரோனா பாதிப்புகள் அதிகம் ஆனதால் ஆகஸ்ட் 15ம் தேதி வரை ரயில் சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக ரயில்வே அமைச்சர் அறிவித்துள்ளார்.

அதுமட்டுமின்றி மத்திய அமைச்சரின் தடை உத்தரவு இன்னும் சில நாட்களில் முடிவடையும் நிலையில் உள்ளதால் மீண்டும் புதிய அறிவிப்புகள் வெளியிட்டுள்ளது ரயில்வே அமைச்சகம் அதன்படி மத்திய அரசு அறிவிப்பு வெளியிடும் வரை ரயில் சேவைகள் காலவரையின்றி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக ரயில்வே அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதில் 250 சிறப்பு ரயில்கள் மற்றும் மும்பை மெட்ரோவின் சில சேவைகள் தொடரும் என ரயில்வே அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles