கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க நாடெங்கும் ஊரடங்கை அறிவித்தது தமிழக அரசு. அதன் பின் மக்கள் பொருளாதார சரிவினால் அவதிப்படுவதை அறிந்து மண்டல வாரியாக பிரித்து ஊரடங்கை ஒரு சில கட்டுப்பாடுகளுடன் அறிவித்தது அரசு.
தற்பொழுது சில மண்டலங்களில் போக்குவரத்தும் இயங்க ஆரம்பித்த இந்த நேரத்தில் கொரோனா தாக்குதல் நாளுக்கு நாள் சென்னையில் அதிகரித்து வருகிறது. சென்னையை சார்ந்த பகுதிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளதால் சில பகுதிகளில் மட்டும் முழு ஊரடங்கை அறிவித்தது அரசு.
இது பற்றி முதலமைச்சார் “பெருநகர சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளிலும் திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதை அடுத்து, அப்பகுதிகளில் வசிக்கும் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களின் இருப்பிடத்திற்கே சென்று ரூ.1000 ரொக்க நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளேன்.” என்று அறிவித்து உள்ளார்.