Monday, May 20, 2024
-- Advertisement--

24-ம் தேதி அமலுக்கு வரும் ஊரடங்கில் எதற்கெல்லாம் அனுமதி லிஸ்ட் இதோ..!!!

கொரோனா தொற்று பரவல் காரணமாக தமிழக அரசு வல்லுனர்கள் மற்றும் சட்டமன்ற கட்சிகளுடனான ஆலோசனைகளின் படி ஒரு வாரத்திற்கு தளர்வுகளற்ற ஊரடங்கு அமல்படுத்துகிறது.

கொரோனாவின் பரவல் ஒரு சில மாவட்டங்களில் குறைந்து இருந்தாலும் பல மாவட்டங்களில் அதிகரித்து வருவதை காணமுடிகிறது அதனால் மக்கள் ஊரடங்கினை கடைப்பிடித்தால் மட்டுமே கொரோனா தொற்றை கட்டுக்குள் கொண்டு வர முடியும் என்று அறிவித்துள்ள தமிழக முதல்வர் மு க ஸ்டாலின்.

அதனைத் தொடர்ந்து இந்த ஊரடங்கில் எது இயங்கும் இயங்காது என்பதை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில் இந்த ஊரடங்கு 24 -5 -2021 காலை முதல் நடைமுறைக்கு வரும் என்று அறிவித்து உள்ளார்கள்.

இந்த ஊரடங்கில் எதற்கு அனுமதி லிஸ்ட் இதோ:

மருந்தகங்கள் நாட்டு மருந்து கடைகள் கால்நடை மருந்தகங்கள் அனுமதி.

பால் விநியோகம், குடிநீர் மற்றும் தினசரி பத்திரிக்கை விநியோகம்.

பொதுமக்களுக்கு தேவையான காய்கறிகள், பழங்கள், தோட்டக்கலைத் துறை மூலமாக சென்னை நகரத்திலும் அனைத்து மாவட்டங்களிலும் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து வாகனங்கள் மூலமாக வழங்கப்படும்.

தலைமை செயலகத்திலும் மாவட்டங்களிலும் அத்தியாவசிய துறைகள் மட்டும் இயங்கும்.

தனியார் நிறுவனங்கள், வங்கிகள், காப்பீடு நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் போன்றவற்றில் பணி புரிவோர் வீட்டிலிருந்தே பணிபுரிய அனுமதி.

E-commerce எனப்படும் மின்னணு சேவை காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை இயங்கலாம்.

உணவகங்களில் காலை 6 மணி முதல் 10 மணி வரையிலும் 12:00 மணி முதல் மதியம் 3 மணி வரையிலும் மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் பார்சல் சேவை மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. SWIGGY ZOMATO போன்ற மின் வணிகம் அதாவது E -COMMERCE மூலம் உணவு விநியோகம் செய்யும் நிறுவனங்கள் மேற்கொண்ட நேரங்களில் மட்டும் அனுமதிக்கப்படும்.

பெட்ரோல் டீசல் பங்குகள் வழக்கம் போல் இயங்கும்.

ஏடிஎம் மற்றும் அவற்றுக்கான சேவைகள் அனுமதி

வேளாண் விளைபொருட்கள் மற்றும் வீடு பொருட்களை கொண்டு செல்வதற்கு அனுமதிக்கப்படும்.

சரக்கு வாகனங்கள் செல்லவும் அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்லவும் அனுமதிக்கப்படும்.

உரிய மருத்துவ காரணங்கள் மற்றும் இறப்புக்கு மட்டும் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல பதிவுடன் அனுமதிக்கப்படும்

மருத்துவ காரணங்களுக்காக மாவட்டத்திற்குள் பயணிக்க இப்பதிவு தேவையில்லை.

செய்தி மற்றும் ஊடக நிறுவனங்கள் வழக்கம் போல இயங்கலாம்.

தடையின்றி தொடர்ந்து செயல்படவேண்டிய தொடர் செயல்முறை தொழிற்சாலைகள், அத்தியாவசிய பொருட்கள், மருத்துவ உபகரணங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் ஏற்கனவே தெரவிக்கப்பட்டுள்ள வழிகாட்டுதலின்படி அனுமதிக்கப்படும்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles