கொரோனா நோயாளிகள் பக்கத்தில் வந்தாலே எச்சரிக்கும் கருவி ஒன்றைக் கண்டுபிடித்து உள்ளார்கள் பீகாரை சேர்ந்த பள்ளி மாணவர்கள்.
பீகார் தலைநகர் பாட்னாவில் செயல்படும் பள்ளியில் ஒன்றில் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவர் அர்பித் குமார் மற்றும் அவரது தம்பி அபிஜித் குமார் இவர் பத்தாம் வகுப்பு படிக்கிறார். சிறுவயதிலிருந்தே அறிவியல் ஆராய்ச்சிகளில் அதிகம் ஆர்வம் உள்ள இவர்கள் பல ஆராய்ச்சி தாமாகவே மேற்கொண்டு வந்தனர்.
சமீபத்தில் தரமான குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் கண்டுபிடிப்புக்காக பிரதீபா புரஸ்கார் விருது குடியரசு தலைவர் இவர்களுக்கு வழங்கினார்.
தற்பொழுது கொரோனா தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் இவர்களின் கண்டுபிடிப்பு மக்களுக்கு பயன்பட வேண்டும் என்று நான்கு மாத ஆராய்ச்சிக்குப் பின் எச்சரிக்கை கருவியை வெற்றிகரமாக கண்டுபிடித்துள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் கூறியது இந்த கருவி சட்டையில் அணிந்து கொள்ளும் வகையில் சிறிய பேட்ச் வடிவில் இருக்கும். யாருக்கெல்லாம் உடல் வெப்பநிலை அதிகமாக இருக்கிறதோ ஒரு மீட்டர் தொலைவில் இருந்து வரும்போதே இந்தக் கருவி பீப் ஒலி எழுப்பி எச்சரிக்கை செய்யும்.
வெப்பநிலை அதிகமாக உள்ளவர்கள் அருகே வந்தால் அதிர்வுகளை ஏற்படுத்தி எச்சரிக்கை செய்யும். இந்தக் கருவி மூலம் உடல் வெப்பம் அதிகமுள்ள அவர்களிடமிருந்து எளிதாக விலகி செல்ல முடியும் என்று கூறிய அவர்கள் எங்களது கருவிக்கு காப்புரிமைக்காக ஆகஸ்ட் மாதம் மத்திய அரசிடம் விண்ணப்பித்தோம் பல்வேறு பரிசீலனைக்குப் பிறகு மார்ச் 26 ஆம் தேதி காப்புரிமை கொடுக்கப்பட்டது.
இது வியாபாரமாக மட்டுமல்லாமல் மக்களை காக்கும் கருவியாக இருந்தால் எங்களுக்கு சந்தோஷம் என்று அந்த மாணவர்கள் கூறியுள்ளார்கள்.