கொரானோ நோயாளி ஒருவர் தப்பித்து ஓடிய போது சுகாதார துறை அலுவலர்கள் அவரை ஓடிச் சென்று பிடித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அப்படிப்பட்ட நபர் ஒருவர் தப்பி ஓடியதும் அவரை சுகாதார ஊழியர்கள் துரத்திப் பிடிக்கும் காட்சிகள் போன்ற வீடியோக்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
கேரளா மாநிலம் பத்தனம் திட்டா பகுதியில் சேர்ந்த பேருந்து நிலையத்தில் ஒருவர் குடிபோதையில் தள்ளாடியபடி நின்றுள்ளார். இவர் முக கவசம் அணியாமல் இருந்ததால் அவரைக் காவலர்கள் விசாரித்துள்ளனர். அவர் மூன்று நாட்களுக்கு முன்னர் துபாயில் இருந்து வந்ததும் வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள அவருக்கு உத்தரவிட்டதும் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து போலீசார் சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு தகவல் அளித்த உடன் அவரை ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயற்சி செய்த போது அவர்களை தள்ளிவிட்டு ஓட தொடங்கியுள்ளார். இவரை பாதுகாப்பு கவச உடை உடன் உள்ள ஊழியர்கள் அவரை துரத்தி சென்று பிடித்து அவர் கை கால்களை சற்று சேர்த்து கட்டி அழைத்து சென்றுள்ளனர்.
மேலும் இந்த நபர் மீது தொற்று நோய் பரப்பிய குற்றத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவரை சுகாதாரத்துறை ஊழியர்கள் துரத்தி சென்று பிடிக்கும் வீடியோ இணையத்தில் மிகவும் வைரலாகி வருகிறது.