கொரானோ என்னும் வைரஸ் நோய் உலகெங்கும் பரவி வரும் நிலையில் இந்தியாவிலும் அதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துகொன்டே வருகிறது. இந்நோய் தாக்கத்தில் அதிகமாக பாதிக்கப்பட்ட மாநிலங்களில் தமிழகமும் ஒன்று.
இதனால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ்நாட்டில் அன்றாட ஊதியம் பெறுவோரின் நிலைமை மிகவும் மோசமானதாகவும் சவாலாகவும் உள்ளது.இதனால் மக்கள் பலரும், பிரபலங்களும் தாமாகவே முன் வந்து கொரானோ நிதி தொகை அளித்து வருகின்றனர்.
இதுவரை ரூ. 79 கோடியே 74 லட்சத்து 61 ஆயிரத்து 424 ருபாய் வந்துள்ளதாக தமிழ்நாட்டின் முதலமைச்சர் எடப்பாடி பழனி சாமி அறிவித்து பொது மக்களுக்கும் தன்னார்வ தொண்டு நிறுவனத்திற்கும் நன்றி கூறி உள்ளார்.