குக் வித் கோமாளி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற ஒரு நிகழ்ச்சி. பல டென்ஷனில் இருக்கும் பொழுது இந்த நிகழ்ச்சியை பார்ப்பவர்களால் கண்டிப்பாக சிரிக்காமல் இருக்க முடியாது அந்த அளவிற்கு நகைச்சுவையாக இருக்கும் கோமாளிகளின் சேட்டைகள்.
குக் வித் கோமாளி நிகழ்ச்சி வெற்றிகரமாக அமைந்ததால் விஜய் டிவி வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியை நடத்தி வருகின்றனர். சீசன் 2வில் சகிலா, அஸ்வின், பாபா பாஸ்கர், பவித்ரா, கனி என ஏகப்பட்ட போட்டியாளர்கள் பங்குபெற்றனர். இந்நிலையில் அந்த நிகழ்ச்சியின் பைனல்லே ப்ரோமோ ஒன்று வெளியாகியுள்ளது அதில் சிறப்பு விருந்தினராக நடிகர் சிலம்பரசன் வந்துள்ளார்.
குக் வித் கோமாளி சீசன் 2வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சிலம்பரசன் இந்த நிகழ்ச்சியைப் பற்றி பெருமையாக கூறினார். கூறியவுடன் மன்மதன் படத்தில் சிம்புவிற்கு கட்டி பிடித்தவுடன் மூக்கிலிருந்து ரத்தம் வழியும் அதுபோல சிம்புவை கட்டிப் பிடித்த புகழ் தனது மூக்கை துடைத்து சிம்புவை கலாய்த்தார் அதனை பார்த்த சிம்பு செல்லமாக புகழை அடிப்பேன் என்பதைப்போல கை ஓங்கினார் ஒரே சிரிப்பலையில் அரங்கமே அதிர்ந்தது.