Wednesday, May 8, 2024
-- Advertisement--

குக் வித் கோமாளி சீசன் 3 இவர்கள் தான் கலந்துக்க போறாங்களா..? அப்போ செமயா இருக்குமே வெளியான புகைப்படம்.

குக் வித் கோமாளி நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பாகி மாபெரும் வரவேற்பு பெற்ற நிகழ்ச்சி. குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்குபெற்று அஸ்வின், சிவாங்கி, ஷகிலா, சுனிதா, தீபா, புகழ், பவித்ரா போன்றவர்கள் பெரிய அளவில் பிரபலம் அடைந்தார்கள்.

அதில் குறிப்பாக அஸ்வின் தற்பொழுது என்ன சொல்லப் போகிறாய் என்ற படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். பவித்ரா நாய் சேகர் படத்தில் நடிகர் சதீஷ் அவர்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

சிவாங்கி சிவகார்த்திகேயனின் DON படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். புகழ் அஸ்வின் அவர்களுடன் ஒரு படத்தில் கமிட் ஆகியுள்ளார் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் அனைவரும் பிரபலமடைந்து தனது வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு சென்று விட்டார்கள்.

அதுபோல மீண்டும் வாய்ப்பை உருவாக்கித் தருவதற்காக விஜய் டிவி குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியை தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

குக் வித் கோமாளி நிகழ்ச்சி பொங்கல் தினத்தன்று வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப் போகும் போட்டியாளர்களின் பட்டியல் டிசம்பர் மாதத்தில் வெளியிடுவார்கள் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது ஆனால் இன்றுவரை சஸ்பென்ஸாக வைத்துள்ளது விஜய் டிவி.

இந்நிலையில் சமீபத்தில் தங்கதுரை சுனிதா தீபா அவர்களின் புகைப்படங்கள் இணையத்தில் வலம் வந்து கொண்டிருக்கிறது. ஒருவேளை இது குக் வித் கோமாளி சீசன் 3 புகைப்படங்களாக இருக்குமோ என்று கமெண்ட் செய்து வருகிறார்கள் ரசிகர்கள். இருக்கலாம் இல்லாமலும் இருக்கலாம் பொறுத்திருந்து பார்ப்போம்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles