Friday, May 17, 2024
-- Advertisement--

சம்பாரித்த பணத்தில் முதல் முதலாக புது கார் வாங்கிய குக் வித் கோமாளி புகழ்..!!! இன்னும் புகழ் பெற வாழ்த்தும் ரசிகர்கள்.

விஜய் டிவியில் மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் நிகழ்ச்சிதான் குக் வித் கோமாளி.

இந்தக் குக் வித் கோமாளி முதல் சீசனில் நடிகர் விஜயகுமார் அவர்களின் மகள் வனிதா விஜயகுமார் டைட்டிலை வென்றார். அதே நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ரம்யா பாண்டியன் ரன்னர் இடத்தை பிடித்திருந்தார்.

குக் வித் கோமாளி சீசன் 1 மாபெரும் வெற்றி பெற்றதால் அந்த நிகழ்ச்சியை குக் வித் கோமாளி சீசன் 2 என்று தொடர்ந்து ஒளிபரப்பி வந்தது விஜய் டிவி. இந்த நிகழ்ச்சியில் நடிகை சகிலா ,பாபா பாஸ்கர் , மதுரைமுத்து, அஸ்வின், தர்ஷா, பவித்ரா, கடைக்குட்டிசிங்கம் தீபா ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த நிகழ்ச்சியில் கோமாளிகள் செய்யும் நகைச்சுவை மக்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்று வருவதால் கோமாளிகளாக புகழ்,சிவாங்கி, பாலா, மணிமேகலை, சுனிதா, விஜே பார்வதி, டிக் டாக் பிரபலம் சக்தி ஆகியோர் பங்கு பெற்றனர்.

கோமாளிகள் செய்யும் சேட்டைகள் மக்களால் பெரிதாக ரசிக்க படுவதால் ஒவ்வொருவருக்கும் பெரிய ரசிகர்கள் கூட்டம் அதிகரித்துக் கொண்டே வந்தது.

குறிப்பாக புகழ் என்பவருக்கு மக்கள் பெரிய ஆதரவை கொடுத்து அவருடைய நகைச்சுவையை ரசித்து வந்தார்கள். சில மாதங்களுக்கு முன் முதன்முதலாக தனது அன்பு தாயுடன் இணைந்து புகைப்படத்தை வெளியிட்ட புகழ். தற்பொழுது முதன் முதலாக தான் சம்பாதித்த தொகையில் கார் ஒன்றை வாங்கி அதனை இணையத்தில் வெளியிட்டுள்ளார். அந்த காரை வாங்குவதற்கு மகாபா ஆனந்த் அவர்களை அழைத்து சென்று உள்ளார்.

புதுக் கார் வாங்கிய புகழ் தனது சந்தோஷத்தை ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்வதற்காக புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார். எங்க பரம்பரைலே முதல் கார் அம்மா அழுதுட்டாங்க என்று தனது உருக்கமான பதிவு ஒன்றை போடு இருந்தார். அதனை பார்த்த ரசிகர்கள் புகழ் இன்னும் புகழ் பெற வாழ்த்துக்கள் என்று அவரை வாழ்த்தி வருகின்றனர்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles