Friday, May 17, 2024
-- Advertisement--

முதல் முதலாக தனது அன்பு தாயுடன் புகைப்படம் எடுத்து வெளியிட்ட குக் வித் கோமாளி பிரபலம் புகழ்..!!! தாய் அன்பு போல வருமா..!!!

விஜய் டிவியில் அது இது எது என்ற நிகழ்ச்சிக்கு அடுத்து மக்கள் மனதில் ஒரு பெரிய இடத்தை பிடித்த நிகழ்ச்சி என்றால் குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான். இந்த நிகழ்ச்சி நகைச்சுவையாக இருப்பதால் மக்கள் இதனை விரும்பி பார்த்து வருகின்றனர். முதலில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் ரம்யா பாண்டியன், வனிதா போன்ற பிரபலங்கள் கலந்துகொண்டனர் இந்த நிகழ்ச்சி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது.

அதனைத் தொடர்ந்து குக் வித் கோமாளி சீசன் 2 என்ற நிகழ்ச்சி நவம்பர் 14 ஆம் தேதியிலிருந்து தொடங்கி தொடர்ந்து ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது இதில் மதுரை முத்து, கடைக்குட்டி சிங்கம் தீபா, அஸ்வின் மற்றும் நடிகை சகிலா போன்றவர்கள் பங்கு பெற்றார்கள்.

இந்த நிகழ்ச்சியில் கோமாளியாக புகழ் உள்ளார் இவரின் நகைச்சுவைக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. அந்த அளவிற்கு புகழ் மக்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றார் இந்த நிகழ்ச்சி பிரபலம் அடைந்தவுடன் இவருக்கு ஏகப்பட்ட பட வாய்ப்புகள் குவிந்தது அதுமட்டுமல்லாமல் இயக்குனர் ஹரி அவர்களின் அடுத்த படத்தில் புகழ் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. விஜய் டிவியில் இருந்து சினிமாவிற்கு சென்ற பெருமை சந்தானம், சிவகார்த்திகேயன், ரியோ, தீனாவை தொடர்ந்து தற்பொழுது புகழுக்கும் கிடைத்து உள்ளது.

தற்பொழுது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தனது நகைச்சுவையால் கலக்கி கொண்டிருக்கும் புகழ் முதன்முதலாக தனது தாயுடன் இருக்கும் புகைப்படத்தை டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

புகழுக்கு அவரது அம்மா என்றால் ரொம்பப் பிடிக்குமாம் அம்மாவின் செல்லப் பிள்ளையாம் புகழ். சின்னத்திரையில் தற்போது கலக்கி கொண்டிருக்கும் புகழ் இன்னும் மென்மேலும் வளர அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles