Thursday, May 2, 2024
-- Advertisement--

மனிதநேயம் பற்றி பேசிய அப்துல் காலம் மாணவனை நேரில் அழைத்து பாராட்டிய முதல்வர் மு.க.ஸ்டாலின்…!!!

மத நல்லிணக்கம் குறித்து இணையதள தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த பள்ளி சிறுவன் அப்துல் கலாமை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

சிறுவன் பேட்டியில் கூறியதாவது : “உலகத்துல அனைவரும் சமம், நம்ப யாரையும் புடிக்காதுன்னு முடிவு எடுக்க முடியாது. எல்லாரும் நம்பளை மாதிரிதான். சிலப்பேருக்கு கஷ்டம் இருக்கும். அந்தக் கஷ்டத்தை வெளில காட்ட மாட்டாங்க. உள்ளேயே வச்சிக்கிட்டு இருப்பாங்க.

யாரையும் புடிக்காதுன்னு சொல்லாதீங்க. எல்லாரும் என்னை பல்லான்னுதான் கூப்பிடுவாங்க. நான் ஏன் யாரையும் புடிக்காதுன்னு சொல்லணும்? எல்லாரும் நண்பர்கள் மாதிரிதான். ஒற்றுமை இல்லாம ஏன் இருக்கணும். நம்ம நாடு ஒற்றுமை நாடுன்னு சொல்றோம். ஒற்றுமை இல்லாம இருந்துச்சினா எப்படி?” என்று கூறியிருந்தார்.

இந்த சிறுவனின் கருத்தை சமூக வலைத்தளங்களில் பலரும் வெகுவாக பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் வாடகை வீட்டில் வசிக்கும் அப்துல் கலாம் குடும்பத்தை வீட்டு உரிமையாளர் காலி செய்ய கூறி வருவதாக இணையதளத்தில் தகவல் வெளியாயின. இந்நிலையில் மாணவன் அப்துல் கலாமை முதல்வர் மு.க ஸ்டாலின் நேரில் அழைத்து மாணவனை பாராட்டி உள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் தனது பெற்றோருடன் அப்துல்கலாம் முதல்வர் மு.க ஸ்டாலின் நேரில் சந்தித்து வாழ்த்துகளை பெற்றுள்ளார்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles