Sunday, May 19, 2024
-- Advertisement--

நியாயவிலை கடைகளில் தரமான அத்தியாவசிய பொருட்கள் வழங்க அதிரடி உத்தரவுவிட்ட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்…!!!

நியாய விலைக் கடைகளில் தரமான அத்தியாவசிய பொருட்கள் தங்கு தடையின்றி கிடைக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு கூட்டம் வாழ்த்துக்கள் நடைபெற்றது. பொதுமக்களுக்கு நியாய விலை கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் தங்கு தடையின்றி கிடைத்து பொருட்களின் தரத்தின உறுதி செய்திட வேண்டும். குடும்ப அட்டைகள் கோரி விண்ணப்பிப்பவர்களுக்கு காலதாமதமின்றி குடும்ப அட்டைகள் கிடைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கோவிட் பெருந்தொற்று காலத்தில் கடன் உதவி கோரும் சுய உதவி குழுக்கள், சிறு வணிகர்கள், மாற்றுத்திறனாளிகள், மகளிர் தொழில்முனைவோர் போன்றவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்திட கூட்டுறவு சங்கங்கள் வாயிலாக தகுதியானவர்களுக்கு கடன் வழங்கிட வேண்டும் என உறுதி செய்துள்ளார். இதேபோல் பொது விநியோகத் திட்டத்தை முழுவதும் கணினி மயமாக்குதல் பல துறைகள் மூலம் நடத்தப்படும் நியாய விலைக் கடைகளை ஒரே துறையின் கீழ் கொண்டுவருதல் வாடகை கட்டிடங்களில் விலைக் கடைகளுக்கு சொந்தக் கட்டிடங்கள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்துதல் பெண் பணியாளர்களுக்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.

சேமிப்பு கிடங்குகளை மேம்படுத்துதல் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் நெல் ஆகியவற்றை ஓரிடத்தில் இருந்து மற்றோர் இடத்திற்கு கொண்டு செல்லப்படுவதை இணையவழியில் கண்காணித்தல் எடைக்குறைவு போன்றவற்றை களைதல் தரமான சேவையை பொதுமக்களுக்கு வழங்குதல் தொடர்பான எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் முதல்வர் ஆலோசனை வழங்கினார்.


Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles