பொது முடக்கம் பிறப்பிக்கப்பட்டு அதிலிருந்து நாளுக்குநாள் வறுமையில் வாடும் மக்களின் வாழ்க்கை முறை மிகவும் மோசமாகி கொண்டே வருகின்றது.
அன்றாடம் அவர்கள் பிழைப்பு நடத்தினால்தான் அவர்களுக்கு சோறு என்றிருக்கும் நிலையில் பல பொது நிகழ்ச்சிகள் நிறுத்தப்பட்டுள்ளன.
கிராமத்து இசையை வளர்க்கும் கலைஞர்களின் வாழ்க்கை முறை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. அதுபோல சர்க்கஸ் தொழிலும் மிகவும் பாதிப்பை அடைந்துள்ளது. மலிந்து வரும் கலையில் சர்க்கஸ் தொழிலும் ஒன்று. இந்தியாவில் பொறுத்தவரை மிகப் பெரிய சர்க்கஸ் நிறுவனமாக கருதப்படும் ஜான்பூவ் சர்க்கஸும் தற்போது மிகவும் பொருளாதார வீழ்ச்சியை கண்டுள்ளது.
இதில் 350 கலைஞர்கள், மற்றும் விலங்குகள் உட்பட பலர் உள்ளனர். அவர்கள் பொதுமுடக்கம் காரணமாக மிகவும் வறுமையை சந்தித்துள்ளதாக கூறுகின்றனர். இதே நிலை நீடித்தால் எங்கள் அன்றாட பிழைப்பிற்கே நாங்கள் என்ன செய்வோம் என்று தெரியவில்லை. மழை, வெயில் என எல்லா இயற்கை பேரிடர்களின் நாங்கள் தாங்கிக் கொள்ளும் சூழ்நிலை தற்போது உருவாகியுள்ளது எனவும், மேலும் ஒரு சர்க்கஸ் நிகழ்ச்சியை திரும்பவும் ஆரம்பிக்க குறைந்தது 50 ஆயிரம் ஆகும் என்றும் அதற்கு நாங்கள் என்ன செய்வோம் என்று தெரியவில்லை என்றும், அவர்கள் கூறுகின்றனர். அரசு பல சலுகைகளை மக்களுக்கு அளித்து இருந்தாலும் சர்க்கஸ் தொழிலாளர்களின் நிலைமை இன்னும் மோசமாக உள்ளது என்பது தான் நிதர்சனமான உண்மை.