கொரானோ வைரஸ் தாக்கி பிரபலங்கள் பலரும் உயிர் இழந்து வருகின்றனர். இயக்குனர்கள், நடிகர்,நடிகைகள் பலரும் உயிர் இழந்து வருகின்றனர். இதனால் திரையுலகில் மிகவும் சோக அலை வீசி வருகிறது.
கொரானோ நோயினால் இதுவரை பல லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் உயிரிழந்தவரின் எண்ணிக்கையும் லட்சத்தை நெருங்கியுள்ளது.
ஹாலிவுட் பிரபல பட ஒளிப்பதிவாளர் அலென் ட்வீயவு, இவர் இயக்குனர் ஸ்டெவன் ஸிபிலிசுடன் பணியாற்றியுள்ளார். ஆஸ்கர் உள்ளிட்ட பல விருதுகளை இவர் வாங்கியுள்ளார்.
கொரானாவால் பாதிக்கப்பட்ட இவர் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இவர் வயது 77 . இவர் கொரானாவால் உயிர் இழந்தது சினிமா உலகத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.