Tuesday, December 3, 2024
-- Advertisement--

இப்போ இது தேவையா பெங்களுருவில் நடிகர் சித்தார்த்திடம் பிரச்சனை செய்த கன்னட அமைப்பினர்…!!! டென்ஷன் ஆன சித்தார்த்..!!!

காவேரி பிரச்சனை கர்நாடகா தமிழ்நாடு இடையே இருக்கும் பெரும் பிரச்சனை. தமிழ்நாட்டிற்கு காவேரி நதி நீர் திறந்துவிடுவதால் பிற்காலத்தில் கர்நாடகாவிற்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் என்று காவேரி நீரை தமிழகத்திற்கு அனுப்பக்கூடாது என்று தொடர்ந்து பல வருடங்களாக கர்நாடகாவில் இந்த பிரச்சனை நடந்து வருகிறது.

சமீபத்தில் கர்நாடகாவை சேர்ந்த ஒரு அமைப்பு தமிழர்கள் இங்கும் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள் அவர்களும் காவேரி நீரை பயன்படுத்தி வருகிறார்கள். எதற்காக நாங்கள் காவேரி நீரை திறந்து விட வேண்டும் என்று போராடி வருகின்றனர்.

சில நாட்களாக பெங்களூரு போன்ற பகுதிகளில் காவேரி நீரை தமிழகத்திற்கு தர மறுத்து கடை அடைப்புகள் செய்து வருகின்றனர். 144 தடை விதித்துள்ளார்கள் கர்நாடகாவில் சில பகுதிகளில்.

இந்நிலையில் சித்தார்த் நடித்த சித்தா படத்தை விளம்பரப்படுத்த ப்ரோமோஷன்காக பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசி வந்து உள்ளார். அப்போது திடீர் என்று அந்த அரங்கில் புகுந்து கன்னட அமைப்பினர் தகராறில் ஈடுபட்டு, சித்தார்த் முன்பு கடும் கோபத்தில் சதம்மிட்டனர். அப்போது அவர்கள், “காவிரி நீர் பிரச்சினை தொடர்பாக பந்த் நடந்துகொண்டிருக்கும் நிலையில், இதெல்லாம் தேவையா? உடனே பத்திரிகையாளர் சந்திப்பை நிறுத்துங்கள்” என்று எதிர்ப்பு தெரிவித்தனர்.

சற்று அமைதியாக அமர்ந்திருந்த சித்தார்த் திடீர் என எழுந்து நன்றி தெரிவித்துக்கொண்டு மேடையிலிருந்து இறங்கிச் சென்றார்.

இது தொடர்பான காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles