Sunday, May 19, 2024
-- Advertisement--

ஆன்லையனில் கடன் தரும் செயலிகளை இந்தியாவில் பினாமிகள் மூலம் நடத்தி வரும் சீனர்கள்..!!! திடுக்கிடும் தகவல்கள் உஷார் மக்களே .

சீனாவை சேர்ந்தவர்கள் பினாமி மூலமாக இந்தியாவில் பல நிறுவனங்கள் நடத்தி வருவது தெரிய வந்துள்ளது தமிழகத்தில் இது தொடர்பாக விசாரணையை தொடங்கியுள்ளது மத்திய உளவுத்துறை அதிகாரிகள் இதுபற்றி மத்திய அரசு கடிதம் அனுப்பி உள்ளனர்.

உடனடியாக கடன் வழங்கும் ஆன்லைன் செய்திகள் மூலம் பல முறைகேடுகள் நடப்பதாகவும் அதிக வட்டி வசூலிக்கும் அவர்கள் கடனை திருப்பிச் செலுத்தாதவர்கள் அநாகரிகமாக மிரட்டியதாகவும் புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பெங்களூரில் இருந்து ட்ரு கிண்டில் டெக்னாலஜி என்ற பெயரில் 110 ஊழியர்களுடன் அழைப்பு மையம் செயல்படுத்துவதும் பல்வேறு பெயர்களில் செயல்படும் செயலிகள் மூலம் சுமார் 2 லட்சம் பேருக்கு இவர்கள் அதிக வட்டியுடன் கடன் கொடுத்து உள்ளனர் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த மையத்தை நடத்தி வரும் பிரமோதா பவான் மற்றும் இதன் உண்மையான உரிமையாளர் சீனாவை சேர்ந்த ஜியா யாமவ் , யுவான் லூன் இவ்வாண்டும் ஆகிய 4 பேரும் கைது செய்யப்பட்டனர்.

அந்த நாலு பேரிடம் நடந்த விசாரணையில் பல முக்கிய தகவல்கள் வெளிவந்துள்ளன இந்தியாவில் கடன் வழங்கும் பல நிறுவனங்கள் சீனாவில் உள்ள ஆண் என்ற நபர் நடத்துகிறார் அதேபோல சீனாவில் சேர்ந்தவர்கள் பினாமிகள் மூலம் இந்தியாவில் பல நிறுவனங்கள் நடத்திவருகின்றனர் கடன் வாங்கியவர் செல்போன்களில் உள்ள தகவல்களை திருடி அதன் மூலம் இந்தியாவின் பல லட்சம் பேரின் தகவல்களை சீன நிறுவனங்கள் தகுதியுள்ளது என்பது தகவல் கிடைத்துள்ளன.

இது போன்ற நிறுவனங்கள் மூலம் இந்தியா தொடர்பான முக்கியத் தகவல்களை சீனாவுக்கு அனுப்பி உள்ளனரா இந்தியாவின் கடல் வழி நுழைவாயிலாக இருக்கும் தென்னிந்தியாவில் சீனர்கள் அதிக நிறுவனங்கள் நடத்த காரணம் என்ன இந்த நிறுவனங்களில் சீன உளவாளிகள் பணிபுரிகிறார்கள் என்று அனைத்து கோணத்திலும் விசாரணை தொடங்கியுள்ளது.

கடன் செயலில் விவகாரத்தில் சீனாவை சேர்ந்த பினாமி நிறுவனம் மற்றும் அதன் நிர்வாகிகள் சிக்கி இருப்பது குறித்து மத்திய அரசுக்கு உளவுத்துறை அதிகாரிகள் கடிதம் மூலமாக தகவல் தெரிவித்துள்ளனர்.

தெரிந்தவர்களிடம் கடன் வாங்கினாலே கடனை சரியான நேரத்தில் கொடுக்காவிட்டால் முகத்தை சுளித்துக் கொள்ளும் இந்த காலத்தில் தெரியாத யாரோ ஒருவரிடம் ஆன்லைனில் கடனை வாங்கிக் கொண்டு உங்களின் ரகசியங்களை பறி கொடுக்கலாமா சற்று சிந்தியுங்கள்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles