Thursday, May 2, 2024
-- Advertisement--

இறந்தும் விருது வென்ற சின்ன கலைவாணர் விவேக்..!!! விருதை அவர் புகைப்படத்திற்கு சமர்ப்பித்த குடும்பத்தினர்..!!! உருக்கமான சம்பவம்.

சின்ன கலைவாணர் விவேக் தனது நகைச்சுவையால் மக்களை சிரிக்க மட்டும் செய்யாமல் சிந்திக்கவும் செய்தவர். விவேக் அவர்களின் நகைச்சுவையில் சமூக சிந்தனையும் எப்போதும் இருக்கும் குறிப்பாக மூடநம்பிக்கைகள் பற்றி மக்களுக்கு நிறைய விழிப்புணர்வு தனது நகைச்சுவை மூலமாக கொடுத்துள்ளார்.

நம்மை நகைச்சுவையால் சிரிக்க வைத்த விவேக் தற்பொழுது நம்மோடு இல்லை என்பதை யாராலும் நம்பவே முடியவில்லை. தனது வாழ்க்கையின் கடைசி நாளுக்கு முதல் நாள் வரை மக்களுக்கு விழிப்புணர்வு கொடுத்து தான் சென்றிருக்கிறார்.

விவேக் அவர்கள் இறப்பிறகு முதல் நாள் மக்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று அரசு மருத்துவமனைக்கு சென்று கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டு மக்களையும் போட்டு கொள்ள அறிவுறுத்தினார்.

நேற்று விவேக் அவர்களின் ட்விட்டர் பக்கத்தில் இருந்து திடீரென்று ஒரு ட்வீட் வந்தது அதில் தனது தந்தைக்கு சிறந்த நகைச்சுவை நடிகர் விருதை தாராள பிரபு என்ற படத்திற்கு கொடுத்த SIIMA அவார்டுக்கு நன்றி கூறியும் இந்த விருதை தன் தந்தையின் சார்பாக நடிகர் யோகிபாபு அவர்கள் வாங்கி கொண்டு அதனை எங்கள் வீட்டில் கொண்டு வந்து சேர்த்ததற்கு நன்றி எனவும் தெரிவித்திருந்தார். அதனை தொடர்ந்து அவரது மகள் தாராளப் பிரபு படத்தில் குழுவினருக்கு நன்றி எப்போது போல ரசிகர்கள் அனைவர்க்கும் நன்றி என்று உருக்கமாக தெரிவித்திருந்தார்.

சமீபத்தில் SIIMA விருது வழங்கும் விழா நடந்தது அதில் விவேக் சார் அவர்களுக்கு தாராள பிரபு படத்திற்காக சிறந்த காமெடியன் விருது கிடைத்தது. விவேக் அவர்கள் தற்பொழுது நம்முடன் இல்லாததால் அந்த விருதை நகைச்சுவை நடிகர் யோகி பாபு அவர்கள் பெற்று அந்த விருதை விவேக் அவர்களின் குடும்பத்தினரிடம் கொண்டுபோய் சேர்த்துள்ளார். குடும்பத்தினர் விவேக் அவர்களின் புகைப்படத்திற்கு அருகில் அந்த விருதை சமர்ப்பித்து புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles