Saturday, May 4, 2024
-- Advertisement--

தன் உயிரையும் பொறுப்படுத்தாமல் வெள்ளத்தில் குழந்தையுடன் சிக்கி தவித்த தாயை மீட்ட இளைஞர்களுக்கு முதல்வர் பாராட்டு…!!!

சேலம் மாவட்டம் ஆத்தூரை அடுத்த முட்டல் ஆனைவாரி அருவி வெள்ளப்பெருக்கில் குழந்தையுடன் சிக்கித்தவித்த இளைஞர்கள் பாதுகாப்பாக மீட்டனர். இளைஞர்களுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே வனத்துறை கட்டுப்பாட்டில் முட்டல் ஆனைவாரி அருவி உள்ளது. இங்கு வர விடுமுறை நாட்களில் உள்ளூர் மட்டுமின்றி வெளியூரை சேர்ந்த சுற்றுலா பயணிகளும் அதிக அளவில் திரண்டு வருகின்றனர்.

கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் ஏரிகளுக்கு நீர் வரத்து அதிகரித்தது. அதேபோல் கல்வராயன் மலை தொடரிலும் பெய்த மழையால் முட்டல் ஆனைவாரி அருவிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் திரண்டு அருவியில் குளித்து கொண்டாடினர். அப்போது நீர்வரத்து திடீரென அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இதில் அருவியில் குளித்துக் கொண்டிருந்த 4 பேர் மறு கரைக்கு சென்று சிக்கிக்கொண்டனர். இதில் குழந்தையுடன் சிக்கி தவித்த இளம்பெண் அதிர்ச்சியில் செய்வதறியாமல் தவிர்த்தார். அப்போது சற்றும் யோசிக்காமல் இரண்டு இளைஞர்கள் கயிறு கட்டி மறு கரைக்கு சென்று குழந்தை மற்றும் தாயை பத்திரமாக மீட்டனர். அதே நேரத்தில் அவர்கள் நிலைதடுமாறி அறிவியல் விழுந்தனர்.

பின்னர் 2 பேரும் நீச்சலடித்து கரை ஏறினர் இதனிடையே அருவிக்கு சென்ற சுற்றுலா பயணி ஒருவர் இதனை வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டதால் இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்வைக்கு சென்றது. தொடர்ந்து அவர் ட்விட்டரில் வீடியோ பதிவிட்டு தாயையும் சேயையும் காப்பாற்றி அவர்களின் தீரமிக்க செயல் பாராட்டுக்குரியது. அவர்கள் அசராமல் சிறப்பிக்க படுவார்கள் தன்னுயிர் பிறரது உயிர் காக்க துணிந்த அவர்களது மனிதநேயமே ஒளிர்கிறது. பேரிடர்களின் போது பொதுமக்கள் கவனமுடன் இருக்க வேண்டும். பண்புடையார் பட்டுண்டு உலகம் என்று இளைஞர்களை வெகுவாக பாராட்டியுள்ளார்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles