Friday, April 26, 2024
-- Advertisement--

வீடு இல்லாமல் தவித்து வந்த வேலம்மாள் பாட்டிக்கு சொந்த வீடு கொடுத்த தமிழக முதல்வர்..!!! மகிழ்ச்சியில் வேலம்மாள் பாட்டி..!!!

கொரோனா காலகட்டத்தில் பொதுமக்களுக்கு இரண்டு தவணையாக ரூபாய் 4000 வழங்கப்படும் என்று முதலமைச்சர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருந்தார் அவர் அறிவித்தபடியே கடந்த 2021 ஆம் ஆண்டு ஜூன் மாதம் இரண்டாம் கட்ட நிவாரணத் தொகை வழங்கப்பட்டது.

2000 ரூபாய் நிவாரண தொகை மற்றும் மளிகை பொருளை கொடுத்தது தமிழக அரசு. அதனை வேலம்மாள் என்ற 90 வயது நிறைந்த பாட்டி ஒருவர் சிரித்தபடி அந்த நிவாரணத் தொகையை வாங்கிக்கொண்ட போது அவரை க்ளோஸ் அப் ஷாட் வைத்து அழகாக புகைப்படம் எடுத்து இருந்தார். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை சார்ந்த ஜாக்சன் ஹெரிபி என்ற பத்திரிக்கையாளர் யதார்த்தமாக எடுத்த அந்த புகைப்படம் வைரல் ஆனது.

வேலம்மாள் பாட்டி 2000 ரூபாய் பணம் மற்றும் அந்த தொகுப்புகளை வைத்துக்கொண்டு குழந்தை போல சிரிக்கும் புகைப்படம் அந்த நேரத்தில் பார்வையாளர்களை பெரிதாக கவர்ந்தது. சமூகவலைத்தளங்களில் அந்த புகைப்படத்தை எடுத்த ஜாக்சன் ஹெர்பி மற்றும் வேலம்மாள் பாட்டிக்கும் பாராட்டுக்கள் குவிந்தது.

அந்த நேரத்தில் நாகர்கோவில் மாநகராட்சியில் புகைப்பட கலைஞராக பணிபுரிந்து வந்தார் . ஒரே புகைப்படத்தில் பாப்புலர் ஆன வேலம்மாள் பாட்டி புகைப்படத்தை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களே தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். வேலம்மாள் பாட்டி தங்கியிருந்த இடம் புறம்போக்கு இடம் என்பதால் அவருடைய வீடு இடிக்கப்பட்டு இருப்பதாகவும் அவருக்கு வீடு வழங்கினால் உதவிகரமாக இருக்கும் என்று அந்த புகைப்படத்தை எடுத்த ஜாக்சன் என்பவர் பேட்டி ஒன்று கொடுத்திருந்தார்.

செய்தியைக் கேள்விப்பட்ட தமிழக முதல்வர் மாவட்ட ஆட்சியரை தொடர்புகொண்டு அந்த பாட்டிக்கு வீடு வழங்க உத்தரவிட்டுள்ளார் முதல்வரின் உத்தரவின் படி இன்று அந்த பாட்டிக்கு குடிசை மாற்று வாரிய வீடு ஒதுக்கப்பட்டது ஆணை வழங்கியுள்ளனர் அந்த குடிசை மாற்று வாரியத்தில் வழங்க வேண்டிய 76 ஆயிரம் தொகை திமுக சார்பில் ஆட்சியரிடம் வழங்கப்பட்டது.

முதலமைச்சரின் இந்த நடவடிக்கைக்கு வேலம்மாள் பாட்டி நான் வீடு இல்லாமல் தவித்து வந்தேன் எனக்கு வீடு கொடுத்ததற்கு ரொம்ப நன்றி நீங்க நல்லா இருக்கணும் என்று முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்துவிட்டு மீண்டும் ஒரு பொன் சிரிப்பு சிரித்தார் வேலம்மாள் பாட்டி.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles